படித்ததில் பிடித்தது
ஹைக்கூவிற்குள் ஹைக்கூ - முனைவர் .ச.சந்திரா
முக்கனியின் சுவை!
மூவர்ணக் கொடியின் மிடுக்கு!
ஹைக்கூ!
மூன்றுமணிநேரப் படம் திருத்தாததை
மூன்று வரிகள்
திருத்திவிடும்!
ஹைக்கூ!
வாசிப்போரை நேசிக்கவைக்கும்!
படிப்பாளியைப் படைப்பாளியாக்கும்!
ஹைக்கூ!
தமிழன்னையின் இளையபுதல்வி!
சிற்றிதழின் சிநேகிதி!
ஹைக்கூ!
முதலிரு வரிகள் புதிர்தொடுக்கும்!
இறுதி வரி புதிர்விடுக்கும்!
ஹைக்கூ!
பறவையில் குயில்குக்கூ
இனிமை!
இலக்கியத்தில் இனிமை
ஹைக்கூ!
சுருங்கச் சொல்லி விளக்கியது
ஔவையின் ஆத்திச்சூடி
அன்று!
இன்று ஹைக்கூ!
சமகாலம் பாடும்!
சமூக இழிநிலை சாடும்!
ஹைக்கூ!
சொல்லும்போது இதழ் ஒட்டாது!
மனதில் இனிதாக ஒட்டும்!
ஹைக்கூ!
முத்தான இருவரிகள்!
முத்தாய்ப்பாய் கடைசி வரி!
ஹைக்கூ!
கருத்துகள்
கருத்துரையிடுக