மதுரையில் இரத்த தான முகாம் 9.10.2011
அகவிழி பார்வையற்றோர் விடுதி மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையும் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர் .
அகவிழி பார்வையற்றோர் விடுதி மாணவ மாணவியர் இன்னிசையுடன் நிகழ்ச்சித் தொடங்கியது . விடுதி நிறுவனர் மு .பழனியப்பன் வரவேற்றார் ,கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஹலோ எப் எம் .லட்சுமணக் குமார் ,கவிஞர் இரா .கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை உரையாற்றினார்கள் .மதுரை வடக்கு வட்டம் வட்டாட்சியர் வி .அலெக்சாண்டர் ராய் சிறப்புரையாற்றினார் .தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கவிஞர் சந்திரன் வாழ்த்துரை வழங்கினார் .உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் செந்தில் குமார் தொகுப் புரையாற்றினார் .விடுதி மாணவர் என் .ராஜா நன்றி கூறினார் .
நடமாடும் அரசு ரத்த வங்கி பேருந்து வரவழைக்கப் பட்டு , அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மு .பழனியப்பன் ,கவிஞர் இரா. இரவி இருவரும் ,நான்கு ஆண்டுகளாக ரத்த தானம் வழங்கி ,ரத்த தான முகாமைத் தொடங்கி வைத்தனர் .
ஹலோ எப் எம் .லட்சுமணக் குமார் முதன்முறையாக ரத்த தானம் வழங்கினார்.விடுதிக்கு உறுதுணையாக இருந்து வரும் விடுதி நிறுவனர் மு .பழனியப்பன் தம்பி ராமசாமி என்ற கோபி ,மற்றும் அவரது நண்பர்கள் விடுதி மாணவர்கள் ,திருமால்புரம் பொது மக்கள், பலரும் ரத்த தானம் வழங்கினார்கள் .ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது .பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நான்கு ஆண்டுகளாக ரத்த தானம் வழங்கி,ரத்த தானம், கண் தானம் ,உடல் தானம் பற்றிய விழிப்புணர்வை விதைத்து வருகின்றனர்

கருத்துகள்
கருத்துரையிடுக