படித்ததில் பிடித்தது
பெண்ணே உன் மனதில்... கவிதாயினி T.கார்த்திகா
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
பெண்ணே உன் மனதில்... கவிதாயினி T.கார்த்திகா
சிந்தும் மழைத்துளியிலே
நான் சித்திரமாய் வடித்த
ஒரு பெண்ணின் உருவம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கல் பட்டு சிதறினாலும்,
என் மனமெனும் ரோஜாவில்
மங்கை அவள்
பனிதுளியாகிப் போனாள்!
கறைபடாத மனதை
களவாடிச்சென்றாள்!
காயமில்லா என் இதயத்தில்
வலி தந்தாள்!
காற்றுப்போக முடியாத
நெஞ்சிலே
கள்ளி அவள்
குடித்தனம் புகுந்தாள்!
பகல்நேரம் கண்ட
கனவாகிப்போனாள்!
பாதையில் என்னை
தனியாக்கிச்சென்றாள்!
பெண்ணே ,
உன்னைத்தேடி
வயதாகிப்போனேன்!
காலங்கள் போனால்
போகட்டும் கண்ணே!
என் காதல் வாழும்
என்றும் இளமையாக!
மண்மீது மீண்டும்
ஜனனங்கள் வேண்டாம்
உன் மனதோடு நானும்
வாழ்ந்தாலே போதும்...
என் வாழ்நாளின் பாரம் தீரும்!
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக