படித்ததில் பிடித்தது
மைவரைந்த கண்கள்! கவிதாயினி T. கார்த்திகா
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index. php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
மைவரைந்த கண்கள்! கவிதாயினி T. கார்த்திகா
நாள்கணக்காய்
இரவில் நடைபோடும்
வெண்ணிலவு..
வெளிச்சத்தில் பெண்ணின் முகம் பார்த்தல்
மண்ணில் வந்து வாழ ஏங்கும்!
பாலைவனச்செடிகள்
எப்போதாவது பெய்யும் மழையில்!
சந்தோசமாய் நனைந்துவிட்டு,
நனைந்த மயக்கத்தில்
தன்னைச்சுற்றி
இளந்தளிகளை ஈன்று
தன்னிலை வந்தவுடன்
வெயில் கொளுத்தும் வானையே பார்த்து
மழைக்காக ஏங்கினாலும்
மடிந்து போவதில்லை!
இந்த பெண்மையும்
மாயவன் விரித்த வலையில்
மதிமயங்கி மாட்டிக்கொண்டு
விடிவிக்க...
ஆளில்லாமல் போனாலும்
தனிமையில் போராடி
முதுமையிலும் ஓய்வதில்லை!
மடிந்தாலும் இவள்
வரலாற்று பாதையின்
நினைவுச்சினங்களின் புதிய போர்க்களம் !
பூக்களை ரசிப்பவன்
அது காற்றோடு மோதி
காயமாகும் ரகசியத்தை
அறிவதில்லை!
பெண்ணின் மைவரைந்த
கண்களை வருணிப்பவன்
அது நாளும் எழுதும்
கண்ணீர் இதிகாசம் அறிவானா?
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக