{பகலவன் குழுமம்} - ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம், பெரியாரின் புகழ் பாடுவோம்!

{பகலவன் குழுமம்} - ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம், பெரியாரின் புகழ் பாடுவோம்!


தமிழ்நாடன்
குவைத்
 
இன்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 133 ஆவது பிறந்த நாள். தமிழர்கள் தெளிவுபெற்றது இவரால், தமிழர்கள் அரசியல் விடுதலை பெற்றது இவரால், எழுச்சியுற்றது தந்தை பெரியாரால், நமது வாழ்வு பணி அரசியல் பொருளாதாரம் என அனைத்து மட்டங்களிலும் இன்று நாம் அடைந்திருக்கும் வளர்ச்சி, உயர்ச்சி என்பதெல்லாம் பெரியார் ஒருவரால் கிடைத்ததாகும்.
 
ஆனால், பெரியார் இன்றும் வாழவேண்டிய செயலாற்ற வேண்டிய கட்டாயம் அப்படியே உள்ளது. நாம் ஒரு அடி மேலேறினால் எதிரி நமக்கும் மேலே நிற்கப் பார்க்கிறான், துரோகிகள் காலைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறான்.
 
கலைஞரை விரட்ட செயலலிதாவை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கேற்பட்டது, கெட்ட வாய்ப்பா? வேறு வழியின்றியா? அல்லது துப்பின்றியா? சிந்திக்க வேண்டும். தமிழினம், தமிழ்தேசியம் என்றெல்லாம் காலம் காலமாக பேசி, இரண்டில் ஒருவர்தான் முடிவென்று சொல்வதன் தன்மை என்ன?.
 
அநியாமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று உயிர்களை தமிழர்களை இருபது ஆண்டுகளாக ஆகியும் காக்க முடியாததன் காரணம் என்ன?. இருபது ஆண்டுகள் கழித்து மூளை முடுக்கெல்லாம் போராடி, நிரந்தரத் தீர்வினை உடன் எட்ட முடியாமைக்கு என்ன பெயர்? உடன் எதிரி தெம்பாக செயல்படுவதன் பொருள் என்ன?.
 
இவ்வளவும் நடந்தும், மக்கள் பேரெழுச்சிக்குப் பிறகும், அநியாயமாக ஆறு உயிர்களைப் பறிக்கும் துணிச்சல் பார்பனிய மதம் பிடித்த செயலலிதாவிற்கு யார் தந்தது?. ஆயிரமாயிரம் சொந்தங்கள் ஐந்து நாட்களைக் கடந்தும் பட்டினி கிடக்க, இம்மியளவும் அசையாத முதலமைச்சரை தமிழகம் பெறக் காரணம் என்ன?. 
 
நடிகனுக்கும் மட்டைப் பந்துக்காரனுக்கும் சுளுக்கு வந்தால் கழிவறை வரை சென்று செய்தி வெளியிடம் ஊடகங்கள், இவ்வளவு பெருங்கூட்டமாக மக்கள் வீதிக்கு வந்து போராடுகையில் என்ன செய்துகொண்டிருக்கின்றன. 
 
தமிழர்களே உறவுகளே தோழர்களே இனியும் காலந்தாழ்த்தாதீர்கள், சாதி மதம் கட்சி என்ற வேறுபாடுகள் என்றுமே நன்மை பயப்பவை அல்ல. மக்களை துண்டாடுபவை. மக்களை மாக்களாய் மாற்றுபவை. 
 
ஒரு மூலையில் ஒரு தமிழன் தும்மினால் கூட உலகின் அத்துணை தமிழனிலும் எதிரொலிக்க வேண்டும். அதுவொன்றே தமிழனை வாழவைக்கும். 
 
தமிழன் தமிழனோடு மட்டுமே சண்டையிடுவான், வேறு யாரிடமும் வாலாட்டினால் செருப்பால் அடிப்பான் என்று தெரியும். பிறரிடம் அடங்கிப் போகும் நீங்கள், தம்மில் அடித்துக் கொள்வதேன்.  இந்நிலை மாறவேண்டும்.
 
இன்றைய நாளில் நாம் புத்துணர்வுப் பெறுவோம், பெரியாரின் அறிவைப் பெறுவோம், துணிச்சலைப் பெறுவோம், போராடும் மனநிலையைப் பெறுவோம். எந்த வகையில் போராடுகிறோம், யாருடன் இணைந்து போராடுகிறோம் என்பதல்ல பிரச்சனை, தமிழனுக்கு எதிரானவற்றை எதிர்த்துப் போராடுகிறோம் என்பதே வேண்டும்.
 
ஒன்றுபடுவோம், வென்றெடுப்போம்.
 
பெரியாரின் புகழ் பாடுவோம்.

கருத்துகள்