மங்காத்தா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


மங்காத்தா
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நடிப்பு அஜித்
இயக்கம் வெங்கட் பிரபு

நடிகர் அஜித்தின் 50 வது படம் என்பதால் ரசிகர்களிடேயே அதிக எதிர்பார்ப்பு இருந்தது . நடிகர் அஜித்தை பண ஆசைப் பிடித்த வில்லன் காவல் அதிகாரியாகக் காட்டி வீணடித்து விட்டனர் .படம் முழுவதும் ஒன்று குடிக்கிறார்கள் .இல்லை என்றால் டுமில் டுமில் என்று சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.கிரிக்கெட் சூதாட்டம் பற்றி குறிப்பிடும் கதையில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் சூதாட்டம் பற்றிக் குறிப்பிட வில்லை .திரிசா குடித்து விட்டு வருகிறார் .அஜித்துடன் ஆட்டம் போடுகிறார் .பெண்கள் குடிப்பது சர்வ சாதாரணம் எனப் படத்தில் காட்டி உள்ளனர் .

திரு .அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது நடிகர்களிடம் வேண்டுகோள் வைத்தார் .புகைப் பிடிப்பது போன்றக் காட்சிகளை திரை படத்தில் தவிர்த்து விடுங்கள் என்று .பலர் அவரது வேண்டுகோளை ஏற்றுத் தவிர்த்து வந்தனர் .இந்தப் படத்தில் அஜித் புகைப் பிடிக்கும் காட்சிகள் மிக அதிகமாக உள்ளது .
பசங்க .படத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்த ஜெயப்ரகாஷை மும்பை செட்டியார் என்ற வில்லனாக்கி வீணடித்து உள்ளனர் .அர்ஜுன் அஜித் இருவரும் நடித்து இருப்பதால் ஒரு உரையில் இரண்டு கத்திப் போன்ற சொதப்பல் திரைக் கதையில் உள்ளது. குடி குடியை கெடுக்கும் .ஆனால் நாளை முதல் குடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு தினமும் குடிக்கிறார் .இந்தப் படத்தை பார்த்து விட்டு அஜித் ரசிகர்கள் எத்தனை பேர் குடிகாரகள் ஆகப்போகிறார்கள் என்பது இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கே வெளிச்சம் .

படத்தில் எதனை பேர் செத்தார்கள் என்பதுஇயக்குனர் வெங்கட் பிரபுவிற்கே தெரியாது அத்தனை கொலைகள் . சுடுகிறார்கள் சுடுகிறார்கள் சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள் படம் முழுவதும் .படம் பார்வர்களுக்கு எரிச்சல் வருகின்றது .

சென்னை 28 என்ற படத்தில் தேறிய இயக்குனர் வெங்கட் பிரபு இந்தப் படத்தில் தேறவில்லை
அஜித் படங்களில் பெண்களை கவரும் சென்டிமன்ட் விஷயங்கள் இருக்கும் .ஆனால் இந்தப்படத்தில் அப்படி எதுவும் இல்லை .படம் முழுவதும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருப்பதுக் கண்டு எரிச்சல் அடைகின்றனர் .
அங்காடித்தெரு படத்தில் மிகச் சிறப்பாக நடித்து இருந்த அஞ்சலிக்கு மிகச் சிறிய வேடம் தந்து வீணடித்து விட்டனர் .
படித்தின் இறுதிக் காட்சியில் சிவாஜி படத்தில் இறந்த மொட்டை ரஜினி உயிருடன் வந்தது போல இந்தப்படத்திலும் இறந்த அஜித் உயிருடன் வரும் காட்சி காதில் பூ சுத்தும் காட்சி .

யுவன் சங்கர் ராஜாவின் இசை பாராட்டும் படி உள்ளது .காத்திக் ராஜாவின் உதவியுடன் பின்னணி இசை பாரட்டும் படி உள்ளது .நடிகை லட்சுமி கவர்ச்சிக்கான ஊறுகாய் போல வந்து போகிறார் .அஜித் படம் முழுவதும் சேவிங் செய்யாத நரைத்த தாடியுடனே வருவது ஏன் ?என்று தெரியவில்லை. திரசாவுடன் வரும் பாடல் காட்சியிலும் நரைத்த தாடியுடனேயே வருவது இயக்குனருக்கே வெளிச்சம் .
பணத்திற்காக நண்பனையே சுட்டுக் கொல்லும் காட்சி .விசுவாசமான வேலைக்காரன் முதலாளிக்குத் துரோகம் செய்யும் காட்சி ,குடிப்பது கும்மாளம் இடுவது இப்படி எதிர்மறையான சிந்தனை படம் முழுவதும் அதிகம் உள்ளது . 500 கோடி வேனில் கொண்டு செல்லும் ஓட்டுனர்
காவலரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே பணம் உள்ள ட்ரக்கை மாற்றி விடுவார்களாம் . 500 கோடி வேனில் ஓட்டுனர் உடன் உதவியாளர் இல்லாமலா இருப்பார் ?இது போன்ற கேள்வி எல்லாம் கேட்காமல் படம் பார்க்க வேண்டும் .நம்ப முடியாத காட்சிகள் பல உள்ளது .

கருப்புப் பணம் பற்றிய கதையை கருப்புப் பணம் வைத்து இருப்பவர்களே எடுப்பதுதான் தமிழ்த் திரை உலகில் உள்ள வேடிக்கை .
இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்து ,சன் தொலைக் காட்சி கலா நிதி மாறனிடம் விற்று விற்றார் .சன் தொலைக் காட்சியில் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை படத்தின் விளம்பரம் போட்டு ஒட்டி விடுவார்கள் .படம் பார்த்தவர்களுக்கு நல்ல கொத்து .

அஜித்திற்கு வேண்டுகோள் இனி வரும் காலங்களில் நெகடிவ் எதிர்மறை பாத்திரம் செய்யாமல் பாசிடிவ் நேர்மறை பாத்திரம் செய்வது நல்லது .
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் வேண்டுகோள் வரும் காலங்களில் சமூக அக்கறையுடன் ,சமூகத்திற்கு நல்ல செய்தி சொல்லும் விதமாகப் படம் இயக்குங்கள் .
--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்