அணு உலை

அணு உலை                     ஹைக்கூ                              கவிஞர் இரா .இரவி

அறிவியலின்
ஆபத்து
அணுஉலை

அரிசி உலை உயிர் வளர்க்கும்
அணு உலை உயிர்களைப்
பறிக்கும்

அதனைத் தொலை
உயிருக்கு   உலை
அணு உலை

நன்மையை விட
தீமையே அதிகம்
அணு உலை

கூட்டமாகக்    கொல்லும்
கொடிய வில்லன்
கூடங்குளம் அணு உலை

பற்றி எரிந்தால்
அணைக்கவே முடியாது
அணுஉலை

கொள்ளியால்
தலைச்   சொரிதல்
அணுஉலை

ஆதாயத்தை விட
ஆபத்தும் அழிவும் அதிகம்
அணுஉலை

உயிர் இனங்களை மட்டுமல்ல
புல் பூண்டுகளை அழிக்கும்   
அணுஉலை

அயல்நாடுகளில்
அங்கீகரிக்கவில்லை
அணுஉலை

அக்கம் பக்கம்
அழிவு நிச்சியம்
அணுஉலை

வேண்டாம் வேண்டாம்
கூடங்குளம்
ரத்தக்குளமாகிட

உலை வைக்காமல்
உண்ணாவிரதம்
அணுஉலை  மூட

ஜப்பானின் அழிவு
தமிழகத்திற்கு  வேண்டாம்
மூடுக   அணுஉலை
--

--


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!
 

கருத்துகள்

  1. படைப்பாளிக்கு கிடைத்த வெற்றி .மக்களின் எழுச்சி காரணமாக கூடங்குளம் அணு மின் நிலையம் மூட தமிழக சட்ட மன்றத்தில் நாளை தீர்மானம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக