இலங்கைக் கொடூரன்


இலங்கைக் கொடூரன்


கவிஞர் இரா .இரவி

கொலைகாரப் பாவி கொடூரன்
கூசாமல் பொய்ச் சொல்கிறான்

இலங்கையில் மனித உரிமைகள்
இனிதே பேண ப் படுகிறதாம்

எல்லோருக்கும் சம உரிமைகள்
இவர் வழங்கி
இருக்கிறாராம்

தேசிய கீதத்தைக் கூட இலங்கையில்
தமிழில்ப் பாட
த் தடை விதித்தவன்

தமிழ் இனத்தை ஈவு இரக்கம் இன்றி
கொன்று
க் குவித்தக் கொடூரன்

முழுப் பூசணிக்காய் சோற்றில்
மறைப்பது கேள்விப் பட்டு இருக்கிறோம்

பூசணி
த் தோட்டத்தையே சோற்றில்
மறைக்கும் புரட்டன் இவன்

கேழ்வரகில் நெய் கேள்விப் பட்டு இருக்கிறோம்
நெய்யிலிருந்து கேழ்வரகு வரும் என்பான்


வில்லன் கதாநாயகனாக நடித்தால்
திரைபடத்தில் ஜெயிக்கலாம்

வில்லன் கதாநாயகனாக நிஜத்தில்
நடித்தால் தோற்பது உறுதி

அய்.நா மன்றம் தரவேண்டும்
உனக்கு உடன் தண்டனை

அய்.நா மன்றம் தர மறுத்தால்
மக்கள் மன்றம்தரும் உனக்கு இறுதி

முள்ளிவாய்
க்காலில் மூண்ட நெருப்பு உனக்கு
கொள்ளி வைக்காமல் அடங்காது


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்