செங்கொடி கவிஞர் இரா .இரவி
மறைந்தும் மறையாத
துருவ நட்சத்திரம்
செங்கொடி
இனமானத் தீயை
மூட்டிய தீ
செங்கொடி
செங்கொடிகளையும்
வாய் திறக்க வைத்தவள்
செங்கொடி
மூன்று உயிர்கள் காக்க
தன்னுயிர் தந்த தியாகி
செங்கொடி
மனிதாபிமான மற்றவர்களுக்கு
மனிதாபிமானம் போதித்தவள்
செங்கொடி
தன்னை எரித்து
தமிழ்ப் பகை எரித்தவள்
செங்கொடி
உடலால் எரிந்து
உணர்வால் வாழ்பவள்
செங்கொடி
அய் நாவில் ஈழக்கொடி
பறக்க வழிவகுத்தவள்
செங்கொடி
முத்துக்குமாரின் வழியில்
முத்திரைப் பதித்தவள்
செங்கொடி
தூங்கியத் தமிழினத்தை
தன்னை எரித்து எழுப்பியவள்
செங்கொடி
இன எதிரிகளின்
முகத்திரைக் கிழித்தவள்
செங்கொடி
ஈழத்துத் தீலிபனை
நினைவூட்டிச் சென்றவள்
செங்கொடி
இயந்திர உலகில்
இளகிய இதயம் பெற்றவள்
செங்கொடி
சுயநல உலகில்
பொதுநல இமயம்
செங்கொடி
உயிர் ஆயுதம் ஏந்தி
எதிரிகளை வீழ்த்தியவள்
செங்கொடி
ஒரே நாளில்
உலகப் புகழ்ப் பெற்றவள்
செங்கொடி
புலம் பெயர்ந்த தமிழர்களின்
புலம் உணர்த்தியவள்
செங்கொடி
அய்ம்புலனை அழித்து
அறிவுப் புகட்டியவள்
செங்கொடி
தமிழ் இனத்தின் தியாகத்தை
தரணிக்குக் கற்பித்தவள்
செங்கொடி
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக