பல் visit

http://save3tamils.wordpress.com/

போராட்டம் முனைப்பு பெற வேண்டும். தமிழகம் எங்கும் உள்ள தோழர்கள் சென்னை நோக்கி வர வேண்டுகோள் வைத்துள்ளோம். அனைத்து சிறு சிறு அமைப்புகளையும், செயல் வீரர்களையும் இணைக்கும் முயற்சியில் வெற்றியும் கிட்டுகிறது. உண்ணா நிலை அரங்கம் நமது போராட்ட மையம். முதல் கட்ட போராட்டம் செவ்வாய் காலை 9 மணிசென்னை உயர் நீதி மன்றம் முன் கூடுவோம். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நாம் கூடுவதை உலகமும், அரசும் பார்த்து உணரட்டும்.

தமிழ்நாடு எங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் இருக்கிறது. நாங்கள் எதற்கும் கலங்கவில்லை. எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக சிறையில் இருக்கிறோம். ஆனால் செப்டம்பர் ஒன்பதுவரை இன்னும் நாங்கள் எதிர்கொள்ள இருக்கிற நாட்கள் கொடூரமாகத் தெரிந்தாலும் தமிழ்நாடு மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

தமிழ்நாடு எங்களுக்கான தூக்குக் கயிற்றை அறுக்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் இன்னும் இழந்துவிடவில்லை.

-பேரறிவாளன், முருகன், சாந்தன்-

கருத்துகள்