அனுமதியோம் அனுமதியோம் கவிஞர் இரா .இரவி


அனுமதியோம் அனுமதியோம் கவிஞர் இரா .இரவி

காந்தி தேசம் பெயரிடச் சொன்னார் பெரியார்
காட்டுமிராண்டி
த் தேசமாகிட அனுமதியோம்

லட்சியம் செய்யாததால் ஈழத்தில்
லட்சம் தமிழர்களின்
உயிர்களை இழந்தோம்

அலட்சியம் வேண்டாம் இனி ஒரு
தமிழரையும் இழக்க வேண்டாம்

தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
தூக்கிப் போடும் பந்தா ?

தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
விளையாடும் பொம்மையா ?

கொடிய சிங்களன் உனக்குப் பங்காளியா ?
நல்ல
த் தமிழன் உனக்குப் பகையாளியா ?

தூக்கைத் தூக்கிலிடாமல் ஓயமாட்டோம்
மரணத் தண்டனைக்கு மரணம் தருவோம்

உயிரைப் பறிக்க எவனுக்கும் உரிமை இல்லை
உரைத்தவர் அண்ணல் காந்தியடிகள் உணர்ந்திடு

தூக்கை ஆதரிக்கும் அறிவிலிகளிடம் சில கேள்விகள்
தூக்கு உன் தந்தைக்கு என்றால் ஆதரிப்பாயா ?

தூக்கு உன் தாயுக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் சகோதரனுக்கு என்றால் ஆதரிப்பாயா ?

தூக்கு உன் சகோதரிக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உனக்கு என்றால் ஆதரிப்பாயா ?

நேற்று தூக்கு யாருக்கோ என்று இருந்தாய்
இன்று தூக்கு தமிழருக்குத்தானே என்று இருந்தால்

நாளை தூக்கு உனக்கும் வரலாம் உணர்ந்திடு
உலகின் முதல் மொழி தமிழ்

உலகின் முதல் மனிதன் தமிழன்
உலகின் முதலினம் அழிந்திட

ஒருபோதும் இனி அனுமதியோம்
உலகிற்கு மனிதநேயம் கற்பித்தவன் தமிழன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
உலகிற்கு உரைத்தவன் தமிழன்

உலகப் பொதுமறை தந்தவன் தமிழன்
ஒருவனுக்கு ஒருத்தி என்று உலகிற்கு

ஒழுக்கம் கற்பித்தவன் தமிழன்
மிருகவதையைக் கண்டிக்கும்

மிருக ஆர்வலர்களே
மனித வதை தடுக்க
மனிதாபிமானத்தோடு வாருங்கள்

சராசரி மனிதனாக வாழ்ந்தது போதும்
சாதனை மனிதனாகிச் சரித்திரம் படைப்போம்

முள்ளை முள்ளால் எடுப்பது போல
தீர்ப்பைத் தீர்ப்பால் வெல்வது உறுதி

இனி யாருக்கும் மரணதண்டனை இல்லை
என்று ஆக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

கருத்துகள்