ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம் கவிஞர் இரா .இரவி
ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம்
காப்போம் காப்போம்
மனிதநேயம் காப்போம்
தகர்ப்போம் தகர்ப்போம்
தூக்குத்தண்டனைத் தகர்ப்போம்
காந்தியின் தேசத்தில் தூக்குத்தண்டனை
காந்தியடிகளுக்கு அவமானம்
மகாத்மாவின் தேசத்தில் மரணதண்டனை
மகாத்மாவிற்கு அவமானம்
மக்களாட்சியில் மக்கள் விரும்பாத
மரணதண்டனையை நீக்கிடுவோம்
நிரபராதிகளைக் கொன்றுவிட்டால்
நீதியைக் கொன்று விடுகின்றோம்
நீதிக்காக உயிரை விட்ட
நல்ல மன்னர்கள் வாழ்ந்த நாடு
கொன்ற உயிர்களை உலகில் எந்தக்
கொம்பனாலும் திருப்பித் தர முடியாது
கொலைத்தண்டனைக் கொடுப்பதனால்
குறையவில்லைக் குற்றங்கள்
குற்றத்திற்கானக் காரணங்கள்
களையப்பட வேண்டும்
அடிப்படை உரிமைகள்
அனைவருக்கும் வேண்டும்
சக மனிதனை மனிதன்
சரிசமமாக நடத்திடவேண்டும்
ஆதிக்கம் அடக்குமுறை உலகில்
அழித்துவிட வேண்டும்
அடிப்படைத் தேவைகள்
அனைவருக்கும் பூர்த்தியாக வேண்டும்
ஏற்றத் தாழ்வுகள் தகர்க்க வேண்டும்
பாரபட்சம் ஒழிக்கப்படவேண்டும் --
கருத்துகள்
கருத்துரையிடுக