மனசாட்சி உள்ள மனிதநேய ஆர்வலர்களுக்கு
ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொலை ,கண்ணுக்குத் தெரியாமல் சாட்சிகளின்றி நடந்தது .உலகத் தமிழர்கள் தடுக்கத் தவறினோம் .உலக அரங்கில் இனக் கொலையைத் தடுக்கத் தவறிய குற்றவாளிகளாகி விட்டோம் உலகத் தமிழர்கள் .படுகொலைகளை சேனல் 4 ஒளிபரப்பியது .ஆனால் இன்று படுகொலைப் புரிந்த கொடியவன் ராஜபட்சே தண்டிக்கப் பட வேண்டும் என்று இன உணர்வு அலை உலக அரங்கில் எழுந்தது .அதை முறியடிக்க ,திசை திருப்பும் விதமாக மூன்று தமிழர்களை நமக்கு அறிவித்து நம் கண் முன்னே கொலை செய்யத் திட்டமிட்டுள்ள காங்கிரசின் முகத்திரை கிழிப்போம் .இன்று நடக்க இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டு இன உணர்வைப் பதிவு செய்வோம் .மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க வேண்டியது நமது கடமை. மனிதநேய அடிப்படையில் மனிதநேயதிற்காகக் குரல் கொடுக்க வாருங்கள் .இந்தப் படுகொலையைத் தடுக்கா விட்டால் வரலாற்றுப் பழி வந்து சேரும்
மரணதண்டனை மனிதநேயத்துக்கு எதிரானது.நாகரிக சமூகத்தில் அழிக்கப்படவேண்டிய சொல்.
பதிலளிநீக்கு