மதுக்கடைகளை மூடு
தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்
விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது .மது என்ற அரக்கன்
மூளையை உறிஞ்சுவது போல வரைந்துள்ளனர் .பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அன்று சென்னை கன்னிமாரா நூலகத்தில்
மதுக்கடைகளை மூடு என்ற தலைப்பில் கவியரங்கம் கருத்தரங்கம் நடத்தி அவற்றைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .பாராடிற்குரியப் பணி.
இந்த நூலை தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்லி காணிக்கையாக்கி உள்ளார் .முதல்வரின் கவனம் ஈர்த்துள்ளார் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்.
கவிஞர்கார்முகிலோன் ,பாவலர் எழுகதிர் அருகோ,மாம்பலம் சந்திர சேகர் ,ஓவியக் கவிஞர் அமுத பாரதி,மருத்துவர் சொக்கலிங்கம் ,இல .கணேசன், தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ஆகியோரின் கருத்துரை ,மது விலக்கு உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பாக உள்ளது .
மதுக்கடைகளை மூடுங்கள்
மதிக் கண்ணைத் திறவுங்கள்
மது என்பது மதியைக் கொல்வது
மறந்தும் கொள்வது மனத்தைக் கொல்வது
கவிஞர் வசீகரன். அவர்களின் வசீகர வாசகம் வாசகனைச் சிந்திக்க வைக்கின்றது .
குடியின் கேடு பற்றி விரிவாக விளக்கும் நூலக வந்துள்ளது .
காந்தியடிகள் இந்த நாட்டில் இருந்து குடியை ஒழிக்க வேண்டும் என்றுதான் ஆசைப் பட்டார்கள் .
ஆனால் என்று பள்ளிமாணவன் சீருடையோடு சென்று குடிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.
தமிழகத்தில் அரசிடம் இருந்த கல்வித் துறையை தனியார்கள் கொள்ளை அடிக்க தாரை வார்த்து விட்டு ,தனியாரிடமிருந்த மதுக்கடைகளை அரசு எடுத்து மதுக்கடை அருகில் அரசு பார் என்று எழுதி குடிக்க வரும் குடிமகன்களுக்கு அரசு சுண்டலும் முட்டையும் அவித்து கொடுக்கும் அவலம் நடந்து வருகின்றது .
அரசின் கவனம் முழுமையாக மக்கள் நலத் திட்டங்கள் மீது வர வேண்டும் .குடிக் கெடுக்கும் குடி ஒழிக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள் .தமிழக அரசு மட்டும் அல்ல நடுவண் அரசும் இந்திய முழுவதிற்கும் மது விலக்கை நடைமுறைப் படுத்தி காந்தியடிகளின் கனவை நனவாக்க வேண்டும் . மதுக்கடைகளை மூடினால் மட்டும் போதாது. மது தயாரிக்கும் தொழிற்ச்சாலைகளையும் உடன் மூட வேண்டும் என்று வலியுறுத்தும் விதமாக நூல் வந்துள்ளது .
இந்நூலை படித்து விட்டு குடிகாரர்கள் திருந்துவது உறுதி .சிந்தனை மாற்றத்தை தெளிவை உண்டாக்கும் விதமாக கவிதைகள், கட்டுரைகள் உள்ளது .
கவிஞர் அருகோ
பண்டைய பாண்டியர் சேர சோழம் -என்னும்
பரம்பரைக் குல ப்புகழ் யாவையுமே -நம்மை
அழுத்துது விழுத்துது குடிவழியே
கவிஞர் கார்முகிலன்
வருமானம் பெருக்கிடமதுபானம் விற்பது
அவமானம் என நாம் உணரவேண்டும்
இனியேனும் நம்மக்கள் நன்மக்கள் ஆவதற்கு
பூரணமாய் மதுவிலக்கு மலரவேண்டும்
அமுதா பாலகிருஷ்ணன்
கோடி கொடியாய் சரக்கு வித்து
குடிக்க வைத்து குடல் அவித்து
குடி குடியைக் கெடுக்கும் எனக் கொள்கைக்
கொடி பிடித்தல் நல அறமோ ?
கவிவேந்தர் வேழவேந்தன்
சேற்று நீர் கூட இங்கே
தென்னையை வளர்க்கும் .பொல்லா
நாற்றத்தைத் தேக்கி வைத்த
நஞ்சே நீ அழிவ தெந்நாள் ?
பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன்
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உட
லுக்கும் கேடு என்கின்றார் -ஆனால்
மதுவை தடைசெய்யா தேனோ ?
இன்று வரையில் இருகின்றார்
கவிஞர் ஹேமலதா சிவராமன்
மதுக் கோப்பை ஏந்தும் இளைஞர்
கலாச்சாரத்தைக் கெடுக்கும் கொலைஞர்
கவிஞர் ரஹீமா
புகழ்தனை அழித்திடும் போதை தனை
பொருள் அழிந்திடும் முன் புடம் போடு
முனைவர் மரிய தெரசா
உழைத்துப் பெற்ற காசினை
உறிஞ்சி ஏப்பமிடும் மதுக் கடையினை
உடனே மூடு தமிழக அரசே
கவிஞர் துரை .வாசுதேவன்
குடிச்சி குடிச்சி குடலும் வெந்து உடலும் நொந்து
குடும்ப மானம் போகுதடா மூக்கையா
கவிஞர் அஸ்லம் பாஷா
குடியை ஒழிக்க பெண்களால் மட்டுமே முடியும்
குடிகாரனுக்கு முந்தானை விரிக்காமல்
இருந்தால் போதும் .
கவிஞர் எம் .எஸ் வேல்
மதுக்கடைகளை மூடிவிடு மக்கள் சுகமாய் வாழவிடு
ஆரோக்கியமான தமிழகம் உங்கள் ஆட்சியில் மலரட்டும்
கவிஞர் தி .கார்த்திகேயன்
கழிப்பறை கூட இல்லப் பகுதியிலும்
விழிப்பறைகளில் வந்து வீழ்கிறது மதுக் கடைகள் .
கவிஞர் அய்யாறு வாசுதேவன் மாணவர்களின் கல்விக்காக மதுக்கடைகளை மூடு
மட்டில்லாத துன்பம் போக்க மதுக்கடைகளை மூடு
கவிஞர் சுப .சந்திர சேகரன்
உன் வாழ்வைச் சீரழிக்கும் மதுவின் முதுகை முறி
உனதறிவைச் சீராக்கி நல்ல மனிதனாகிச்சிரி
மயிலாடுதுறை இளைய பாரதி
ஏழ்மை நிலையிலுள்ளோர் அவ்வாழ்வும் அழியாக்காணலாகும்
கேடுகள் மிக உண்டு மதுவில் ! அரசே அத்தனை மதுக்கடைகளையும் மூடு.
கன்னிக்கோயில் இராஜா
சுளை போல தமிழ்நாடு மாறணும் அரசும்
கடையை மூடி வரலாறு படைக்கணும்.
கவிஞர் வசீகரன்
குடி கெடுக்கும் குடி என்றார்
குடித்திட கடைகளை ஏன் திறந்தார் ?
நூலில் அனைவரது கருத்துக்களும் கவிதைகளும் மிகச் சிறப்பாக உள்ளது .காலத்திற்கேற்ற கருத்துடன் வந்துள்ள நல்ல நூல் .பண்படுத்தும் பயனுள்ள நூல் .பாராட்டுக்கள் .நூலின் நோக்கமான மதுக்கடைகளையும் மூடும் பனி நாட்டில் விரைவில் நடைபெற வேண்டும் என்பதே மனிதநேய ஆர்வலர்களின் விருப்பம்.
குடியால் பல குடும்பங்கள் மூழ்கி வருகின்றது .பல இளைஞர்கள் வாழ்வை இழந்து வருகின்றனர் .எனவே மதுக்கடைகளை மூடுவது மட்டுமல்ல ,மது தயாரிக்கும் கொடிய தொழிற்சாலைகளையும் உடன் மூடிட வேண்டும் . என்ற கருத்தை உணர்த்தும் விதமாக நூல் வந்துள்ளது .பாராட்டுக்கள்.
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கருத்துகள்
கருத்துரையிடுக