அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி


அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

லோக்பால் மசோதாவில் பிரதமரையும் ,நீதிபதிகளையும், உயிர் அதிகாரிகளையும் சேர்க்கச் சொல்கிறார் திரு.அன்னா ஹசாரே.ஆனால் காங்கிரஸ் அரசு சேர்க்க மறுக்கின்றது.ஏன்?என்பது புரியவில்லை.திருவாளர் பரிசுத்தம் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் அஞ்சுவதன் பொருள் விளங்கவில்லை .மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் .என்ற பழமொழி நினைவிற்கு வருகின்றது .

பிரதமர் ,நீதிபதி இவர்கள் எல்லாம் வானில் இருந்து வந்த தேவ தூதர்கள் அல்ல .இந்தியாவின் முந்தைய பிரதமர்கள் ஊழலில் ஈடுபட்டு வரலாறு நமக்கு உண்டு .சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக பதவி நீக்கப் பட்ட நிகழ்வு நடந்து உள்ளது .நீதிபதிகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் விதமாக ஒருவர் நீதிமன்றத்திலேயே பட்டியில் இட்டார் .

வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்களின் பட்டியலும் ,முதலீடு செய்த தொகை விபரமும் பிரதமர் கைவசம் உள்ளது .ஆனால் அந்தப் பட்டியலை வெளியிட திருவாளர் பரிசுத்தம் மறுப்பது ஏன்? வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்கள் திருடர்கள் .அவர்களின் முகத்திரை கிழிக்கப் பிரதமர் அஞ்சுவதன் காரணம் என்ன ?இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் பலர் காங்கிரஸ் கட்சிக் காரர்கள் .பிறகு எப்படி? வெளியிடுவார் பிரதமர் .திருடர்களுக்கு உடந்தையாக இரு
ப்பதும் குற்றம்தான் .என்பதை பிரதமர் உணரவேண்டும்.

ஊழல் கல்மாடியை பரிந்துரை செய்தது பிரதமர்தான் என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டும் . காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக தன் மதிப்பை மக்கள் மத்தியில் இழந்து வருகின்றது .தவறான வெளி உறவுக் கொள்கையின் காரணமாக ,ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததன் காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தும் இன்னும் திருந்த வில்லை .

அன்னா ஹசாரே ராணு வீரராக இருந்து பாகிஸ்தான் போரில் சண்டையிட்டு நண்பர்களை இழந்து ,தலையில் குண்டுக் காயம் பட்டு ,போரையே வெறுத்து தற்கொலைக்கு முடிவு எடுத்து ,டெல்லி புகைவண்டி நிலையத்தில் விவேகானந்தர் நூலைப் படித்து விட்டு, தற்கொலை முடிவைக் கைவிட்டு ,தன்னம்பிக்கைப் பெற்று ,காந்திய வழிக்கு வந்தவர்.

ஒன்று லோக்பால் மசோதாவில் பிரதமர் ,நீதிபதி
களைச் சேர்த்து இருக்க வேண்டும் .
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட போது முன்பே அனுமதித்து இருக்க வேண்டும் .
அனுமதி மறுத்து கைது செய்தது தவறு .நீதிபதிகளை வரவழைத்து நாட்கள் சிறை என்றார்கள் .நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான அலை வீசியதுக் கண்டு அஞ்சி ,கட்டப் பஞ்சாயத்து செய்வது தவறு என்று சட்டம் உள்ளது. ஆனால் காங்கிரஸ் அரசே கட்டப் பஞ்சாயத்துச் செய்து
அன்னா ஹசாரே அவர்களை விடுதலை செய்தது .அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை இப்போது அனுமதித்தவர்கள் முன்பே அனுமதித்து இருந்தால் காங்கிரசின் மரியாதைக் காப்பாற்றப் பட்டு இருக்கும் .
காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக முகத்தில் தானே கரி பூசிக் கொண்டது .

நம் நாட்டில் பல கோடிப் பேர் ஏழ்மையின் காரணமாக இரவு உணவு இன்றி பசியில் வாடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன ஆனால் நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது .பூனைக்கு யார்? மணி கட்டுவார் .என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தபோது, அன்னா ஹசாரே காந்திய வழியில் பூனைக்கு மணி காட்டியதன் காரணமாக நாடே ஊழலுக்கு எதிராகக் கொதித்து எழுந்து உள்ளது.எந்த எழுச்சியை காங்கிரஸ் சாதரணமாக நினைத்தால் ,அது காங்கிரஸ் முடிவுரையாக அமையும் . இனியாவது தன் அணுகுமுறையை காங்கிரஸ் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மக்கள் ஆட்சியில் இருந்து காங்கிரசை மாற்றி விடுவார்கள்

கருத்துகள்