தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம். கவிஞர் இரா .இரவி


தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம். கவிஞர் இரா .இரவி

கண்ணுக் கண் ,பல்லுக்கு பல் .உயிருக்கு உயிர் என்பது காட்டுமிராண்டிக் காலம்.கொலை செய்தவரை அரசாங்கமே கொலை செய்வது நியாயமா ?உலகில் பல நாடுகளில் மரண தண்டனை ஒழித்து விட்டனர் .உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொண்டு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க மறுப்பது வியப்பாக உள்ளது . கொலை செய்தவரை தூக்கிலிடுவதால் கொலையானவர் திரும்ப வரப்போவதில்லை .நவீன யுகத்தில் பகுத்தறிவுக் கொண்டு சிந்திக்க வேண்டும் .
ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி ஒரு பக்கம் மட்டுமே விசாரிக்கப் பட்டது .மறு பக்கம் இன்னும் விசாரிக்கப் படவில்லை .விசாரணை முரண்பாடு கண்டு சி .பி .அய் .யில் பணிபுரிந்த காவல் அதிகாரி மனம் நொந்து விருப்ப ஓய்வில் சென்றுள்ளார் . கொலை செய்தவனை விட கொலை செய்யத் தூண்டியவனுக்கு
த் தண்டனை அதிகம் என்று நம் சட்டம் சொல்கின்றது .ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்யத் தூண்டியவர்களை விசாரிக்காமல் ,தண்டனை எதுவும் தராமல் நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்டமல் ,தூக்குத் தண்டனை நிறைவேற்ற அவசரப்படுவதன் அர்த்தம் என்ன ?
மாமனிதர் அப்துல் கலாம் மிகச் சிறந்த மனிதர் .அவர் குடியரசுத் தலைவராக இருந்த போது பல ஆண்டுகள் ஆனபோதும் கருணை மனுவை நிராகரிக்கவில்லை .மதுரையில் தவறான நீதி வழங்கியதற்காக ,கள்வன் அல்லாத நிரபராதி கோவலைனைக் கொல்ல ஆணையிட்டதற்காக ஆட்சியையும் , உயிரையும் ,இழந்தான் என்பது வரலாறு . .
தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும் .மனிதநேய ஆர்வலர்கள் . பொது மக்க
ள் யாருமே தூக்குத் தண்டனையை விரும்பவில்லை . கொன்ற உயிரை எந்தக் கொம்பனாலும் திருப்பி தர முடியாது .எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது . 21 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை
தூக்கிலிட்டு
க் கொல்வது மனிதாபிமானமற்ற செயல்.

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்