கடம்பவனம் திருமதி சித்ரா கணபதி அவர்களின் நேர்முகத்திற்கு பாராட்டு மடல்


வணக்கம்
தங்கள் நேர்முகம் கண்டேன் .மிகச் சிறப்பாக இருந்தது .பாராட்டுக்கள் .
தாங்கள் தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் பெயர்த்தி ,திருமதி சாரதா நம்பி அவர்களின் புதல்வி என்ற தகவல் இன்று தங்கள் நேர்முகம் முலம்தான் அறிந்து மகிழ்தேன் .புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பழமொழியை மெய்பிக்கும் விதமாக இருந்தது .வலிமை மிக்க களி பற்றி , கஞ்சி குடிப்பதின் பயன் பற்றி எடுத்துக் கூறி ,தமிழர்களின் உணவு முறை சிறப்பில் தொடங்கி,மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி அளிப்பது ,ஆசிரியர்களுக்கும் பயன்படுவதுப் பற்றி விளக்கி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு, கிராமிய நடனம், சிலம்பாட்டம் பற்றி ,தெருக்கூ த்து ,யோகா தியானம் பயிற்சிப் பற்றி ,நேர்முகத்தின் இறுதியில் நீங்கள் பாடிய பாடல் நல்ல ராகத்துடன் மிக மிக இனிமையாக இருந்தது .பாராட்டுக்கள் .
கடம்பவனம் பற்றி மிக சிறப்பாக விளக்கி கூறிய சிறப்பான நேர்முகம் .பாராட்டுக்கள் .உலகம் முழுவதும் பலரும் பார்த்து உள்ளனர் .தங்களின் லட்சியம் நிறைவேறும் காலம் விரைவில் வருகின்றது .தங்களுக்கு
த் துணை நின்ற தங்கள் கணவர் பொறியாளர் போற்றுதலுக்குறியவர். தமிழ் அறிஞர்களின் பரம்பரையில் வந்த காரணத்தால் தமிழர்களின் பண்பாட்டை, தமிழ் மொழியை ,கலையை வளர்க்கும் தாங்கள் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன் .சந்தித்த வேளை நிகழ்ச்சியில் தங்களை நேர்முகம் கண்ட திரு ரமேஷ் பிரபா அவர்களும் நல்ல பல கேள்விகளைக் கேட்டு தங்களின் ஆற்றலை வெளிப்படுத்தினார் .அவருக்கும் பாராட்டுக்கள்

கருத்துகள்