மதுரையில் புலவரேறு இரா .இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி


மதுரையில் புலவரேறு இரா .இளங்குமரனார் உரை

தொகுப்பு கவிஞர் இரா .இரவி

சிறை என்ற சொல் எப்படி ?வந்தது ,கோழி தன் குஞ்சுகளை இரை தேடப் பழக்கும்போது மேலே உள்ள பருந்துகள் குஞ்சுகளை
க் கவ்வி சென்று விடாமல் இருக்க தன் சிறகை விரித்து காக்கும் .சிறகு போன்றது சிறை .அது போல சிறைவாசிகள் பொதுமக்களால் தாக்கப் படாமல் காக்கும் இடம் தான் சிறை. ஆனால் இன்று சிறை ,சிறைவாசிகள் உயிர் எடுக்கும் இடம் ஆகிவிட்டது .
ஒரு மனிதனைத் தூக்கிலிட எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை .கவிமணி தேசிய விநாயகம் பாடுவார். மனிதனைக் கொள்ள மனிதனுக்கு உரிமை இல்லை .இறந்த உடலை எழுப்ப வேந்தனானாலும் முடியாது .இன்று மனிதநேயம் தேவை .ஈர நெஞ்சம் வேண்டும் .நெஞ்சம் இல்லாதவர்களிடம் கெஞ்சுவது வீண் . 11000 பேர் மட்டும் உள்ள தனி நாடு உள்ளது .சின்ன சின்ன நாடுகள் பல உள்ளது.ஆனால் உலகின் முதன் மொழி ,மற்ற மொழிகளின் தாய் மொழி தமிழ் மொழி பேசும் தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடு இல்லை . தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடு மலரக் கூடாது என்று ஒரு கூட்டம் தடுத்து வருகின்றது.

மு வ .அவர்கள் மிக எளிமையாகப் பல கருத்துக்களை எழுதியவர் . கை ,கையில் கயிறு ,கயிற்றில் பட்டம் .கையால் கீழே இழுக்க பட்டம் வருகின்றது. கையால் கயிறை விட பட்டம் பரகின்றது .ஒன்றுக் கொன்று தொடர்பு இருப்பது போல மனிதனின் சொல் ,செயல் ,எண்ணம் ஒன்றுக் கொன்று தொடர்பு இருக்க வேண்டும் .பட்டம் உயரே பறப்பது போல வாழ்வில் சிறக்கலாம் .மு வ .அவர்கள் மிக எளிமையாகப் பல கருத்துக்களை எழுதியவர்.ஒரு தட்டில் மாமிசங்கள் உள்ளது .தெரு நாய் வந்து மாமிசம் எடுத்து செல்கின்றது .உடன் விரட்டி சென்று கல்லால் அடிக்கின்றனர். சிறிது நேரத்தில் மேலே இருந்து கருடன்(பருந்து ) வருகின்றது மாமிசம்எடுத்து செல்கின்றது .கன்னத்தில் போட்டுக் கொண்டு மகிழ்வோடு வழி அனுப்பி வைக்கின்றனர்.
ஏழ்மையில் உள்ளவன் பசியால் ரொட்டித் திருடினால் அடித்து தண்டிக்கப்படுகின்றான் சாதியால் உயந்தவன் ,வசதி உள்ளவன் திருடினால் தண்டிப்பதில்லை. ஏன் ?இந்த முரண்பாடு .

பாவாணர் அஞ்சாமல்
நேரடியாகக் கருத்துச் சொன்னார் .மு வ வும் அஞ்சாமல் கருத்துச் சொன்னார் .நேரடியாகச் சொல்லாமல் கதையில் வரும் பாத்திரங்களின் மூலம் கருத்துச் சொன்னார் .தமிழனை இழிவுப் படுத்தும் செய்தித்தாளை வாங்காதே .விற்பனை எண்ணிக்கை குறைந்தால் வழிக்கு வருவான் .நான் சர்வாதிகாரி ஆனால் திருக்குறள் ஓதாத திருமணம் செல்லாது .என்று அறிவிப்பேன் .தேவாரம், திருவாசகம், திருமறை ஒலிக்காத கோவிலை ழுத்து மூடு.தமிழில் ஓதாத கோயிலின் உண்டியலில் காணிக்கை போடதே .தமிழை உச்சரிக்காத அர்ச்சகருக்கு தட்டில் பணம் போடாதே .தமிழ் உடனே வரும். தமிழ் மொழி வளர்ச்சிக்கு யார் ?தடையாக இருந்தாலும் அவர்களைப் பகைவர் என்றே ஒதுக்கி விட வேண்டும் .தமிழர்கள் ஒன்றுபட்டு இருந்தால் உட்பகை ஒழியும். அரசு ஆணைகளை தமிழிலேயே இடவேண்டும் .தமிழக ஆளுநராக இருப்பவர்கள் தமிழிலேயே கை ஒப்பம் இடவேண்டும். தெரியாவிட்டால் வந்தவழியே டெல்லிக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் .இப்படி தமிழுக்காகக் குரல் கொடுத்தவர் மு.வ.
குடும்ப வாழ்க்கைப் பற்றி
மு. சொன்னது .வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டிய உலகம் வேறு .வீட்டிற்கு உள்ளே வர வேண்டிய உலகம் வேறு.
வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டிய உலகம் உள்ளே வந்துவிட்டால் அல்லல் பட நேரிடும் .கடித இலக்கியம் வளர்த்த பெருமை மு. வ அவர்களையே சாரும் .புனை கதை உலகத்தில் புகுந்தார் .அவரது ஆக்கப்பணிகளை நினைத்தால் எழுச்சி வரும்.

தொல்காப்பியம் முதலில் வந்தது அதற்கு அடுத்து திருக்குறள் .சங்க இலக்கியங்களுக்கு முந்தியது திருக்குறள். திருக்குறள் இரண்டு அடிகள் இருந்ததால் சிறிய பாடல்களை தொகுத்து சங்க இலக்கியத்தில் சேர்த்தனர் .பதினொன் கீழ் கணக்கில் சேர்த்தனர் . உயரம் குறைவாக உள்ள முதியவரை மாணவர்களோடு சேர்ப்பது போலச் சேர்த்துவிட்டனர் .சங்க இலக்கியப் பாடல்களில் 8 திருக்குறள்கள் மேற்கோள் காட்டிப் பாடி உள்ளனர்.
பளிங்கு போன்ற நீரில் உள்ளே தங்கக் காசு இருந்தது .கையை விட்டு பார்த்தான் .எடுக்க முடியவில்லை .உள்ளே இறங்கிப் பார்த்தான் ஆழம் 200 அடிகள் இருந்தது .அதுபோலதான் திருக்குறள் பார்க்க இரண்டு அடிகள் .கருத்தின் ஆழம் அளவிட முடியாதது .
என்னன்றி என்ற திருக்குறள் சங்க இலக்கியப் பாடலில் மேற்கோளாக வந்துள்ளது .நன்றி வேறு செய்நன்றி வேறு. மாடு என்றால் பக்கம் என்று பொருள் வீட்டிற்கு
ப் பக்கமாக இருந்ததால் மாடு என்றனர் .கால்மாடு ,தலைமாடு என்று சொல் பக்கம் என்பதை உணர்த்தும் . மாடு என்றால் செல்வம் என்று பொருள் .மாடு பால் தருகின்றது செல்வம் சேருகின்றது .அதனால் அதனைத் தொழ வேண்டும் .அதனால்தான் மாடு இருக்கும் இடத்தை தொழுவம் என்றனர். பசுவை தெய்வமாக வணங்கி ,நன்றி அறிதலின் அடையாளமாக மண்ணின் கொடை மதித்துப் பொங்கல் .மாட்டுப் பொங்கல் கொண்டாடி வருகின்றனர் .மாட்டை கொல்வது தமிழர்களின் பழக்கம் இல்லை .வேள்வியில் மாட்டைப் போட்டுக் கொல்வது ஆரியர்கள் பழக்கம் .

பரம்பரை என்றால் பரம் என்றால் தந்தை பரை என்றால் தாய் .
பரம்பரை பூட்டன்,பாட்டன்.தாத்தா ,அப்பா ,மகன் வருசைப் படுத்தினார்கள்.
கெட்ட உதவி, உதவி ஆகாது .நான் மாணவனாக இருந்தபோது சக மாணவன் நீ பீடி குடி குண்டாகி விடுவாய் .அதில் விட்டமின் பி உள்ளது .
விட்டமின் டி உள்ளது .என்றுச் சொல்லி பீடிகொடுத்து குடிக்கச் சொன்னான் .

பூசை என்றால் பூவைத் தூவுதல் அல்ல .பூசுதல் ஈயம் பூசுதல்என்பது போல அவன் கையால் தண்ணிர் உற்றிப் கழுவுதல் பூசுதல் பூசை .தமிழன் அவனாகவே ஆதியில் பூசை செய்தான் .இடையில்தான் ஆரியர் வந்தனர் சிதம்பரத்தில் தேவாரம் பாடக் கூ டாது என்றபோது தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி தீட்சதர்களை உள்ளேப் போகக் கூடாது எனத் தடுத்து இருந்தால் தமிழ் அன்றே வந்து இருக்கும் .


கம்பன் தயரதன் ,இலக்குவன் என்று தூய
த் தமிழ்ச்சொல் பயன்படுத்தியவன் .பெயர்கண்டும் என்ற திருக்குறள் சங்க இலக்கியப் பாடலில் உள்ளது .பெயர் கண்டும் எதைப் பெய்யும் அலை உண்டு அமைவர் நயத்தக்க நாகரிகர் வேண்டுபவர் என்றப பாடல் .நற்றினைப் பாடல் முத்தை இருந்து நற்றோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நதி நாகரிகர் என்ற பாடல்--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


கருத்துகள்