படித்ததில் பிடித்தது


படித்ததில் பிடித்தது


தீவிரவாதிகள் ந .பாலாஜி GRT

சமூகத்தில் நாசக் கிருமிகள்
சாத்தானின் போர் வீரர்கள்
தீவிரவாதிகள்

மதத்தின் போர்வையில்
ஊடுருவி இருப்பவர்கள்
தீவிரவாதிகள்

அறிவு அன்பு காதல் பாசம்
இவை அனைத்தும் துறந்தவன்
துறவி அல்ல பின் ?
தீவிரவாதி

தீண்டாமை ஒழிக்க நினைக்கும் அரசு
ஒழிக்க வேண்டும்
தீவிரவாதம்

மொழி மீதுப் பற்றுக்
கொண்டவன் கவிஞன்

பெண் மீதுப் பற்றுக்
கொண்டவன் காதலன்

மதத்தின் மீது ஈர்ப்புக்
கொண்டவன் தீவிரவாதி

வேண்டாம் என்று சொன்னாலும்
தள்ளிப் போட நினைத்தாலும்
வருவது மரணம்

கருத்துகள்