தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி



தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி




நேற்று



கொசாவா



இன்று தெற்கு



சூடான்நாளை தமிழீழம்



சே
னல் 4 பார்த்துவிட்டு இலங்கையின் முன்னால் அதிபர் சந்திரிகாவின் மகன் கண்ணீர் விட்டு அழுது சிங்களன் என்று வெளியில் சொல்லவே வெட்கமாக உள்ளது.என்றார் .இவ்வளவு கொடூரம் புரிந்த சிங்கள ராணுவத்துடன் தமிழன் எப்படி ?இணைந்து வாழ முடியும் .மனிதநேய ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்
மதுரையில் மு .வரதராசனார் விழாவில் பேசிய முனைவர் இரா .மோகன் சொன்னார் 1950.ஆண்டு இலங்கை சென்று வந்த மு .வ .எழுதிய பயணக் கட்டுரையில் இலங்கையில் சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழ முடியாது .பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது .சிங்களர் புத்தரின் பல்லை வைத்து வணங்குகின்றனர். புத்தரின் பல் முக்கியம் அல்ல புத்தரின் சொல்லே முக்கியம்.ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் .சிங்களர் பேராசை பிடித்து அலைகின்றனர்.ஒன்றுபட்ட இலங்கை என்று இங்கு இருந்து பேசுபவர்களிடம் ஒரு கேள்வி .இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மன்மோகன் இந்தியாவின் பிரதமர் ஆக முடிந்தது .அனால் இலங்கையில் ஒரு தமிழர் அதிபர் ஆக முடியுமா ?முடியவே முடியாது .இலங்கையில் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தி வந்தனர் .அற வழியில் போராடினார்கள் நியாயம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள் .தெற்குபூடான் விடுதலைப் போராட்டமும் ஈழ விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான் .அடக்குமுறைக்கு எதிராகவேப் போராடினார்கள் .போராட்டத்தில் இருவருமே பல போராளிகளை இழந்தார்கள் .பல அப்பாவி பொதுமக்களையும் இழந்தார்கள் .ஐநா மன்றம் தெற்கு பூடான் விடுதலைக்கு முன் நின்று வாங்கித் தந்தது. .அது போல ஈழத்திலும் விடுதலையை ஐநா முன் நின்று வாங்கித் தர வேண்டும் .உலகத் தமிழர்கள் அனைவரின் கோரிக்கை இனி இதுதான் . இலங்கையை இரண்டாகப் பிரிப்பதுதான் அறிவார்ந்த செயலாகும் .இனி சிங்களரும் தமிழரும் ஒன்று சேர்ந்து வாழவே முடியாது .அதை உலக சமுதாயம் உணர் வேண்டும் சம உரிமை ,தனி மாநிலம் இவை எல்லாம் வெட்டிப் பேச்சு . . விடுதலைப்புலிகள் வான்படை, கடல்படை ,கடவுச்சீட்டு, அரசாட்சி என உலகம் வியக்கும் வண்ணம் நடத்தி வந்தனர் . விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தை தாக்கி இருக்கிறார்கள்.ஆனால் ஒருபோதும் சிங்களப் பொது மக்களை தாக்கியது இல்லை .தாக்க நினைதத்தும் இல்லை .தாக்க நினைத்து இருந்தால் இன்று இலங்கையில் ஒரு சிங்களர் கூட உயிரோடு இருந்து இருக்க மாட்டார்கள். விடுதலைப்புலிகள் போர் நெறி கடைபிடித்து வந்தனர் .ஒழுக்கம், கட்டுப்பாடு இருந்தது.இலங்கை ராணுவம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதற்கு இலங்கை ராணுவ வீரர் சாட்சி உள்ளதை சேனல் 4 காட்டி உள்ளது இப்படிப்பட்ட கொடியவர்களுடன் சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?சிந்திப்பீர் .இலங்கை ராணுவம் இந்தியா, சீனா ,இஸ்ரேல் உள்ளிட்ட பன்னாட்டு ராணுவ உதவியுடன் ,ராடார் கருவிகளுடன் ,.செயற்கை கோள் உதவிகளுடன் தமிழ் இனத்தையே பெண்கள் , குழந்தை, முதியவர் என்று பாராமல் தடை செய்ப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி ,பாலியல் வல்லுறவு செய்து உயிரோடு மண்ணில் புதைத்து ,காட்டுமிராண்டிகளைவிட மோசமாக விலங்குகளைவிட மோசமாக நடந்து கொண்டவர்களுடன் இனி சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?. இந்தியா தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் .தமிழரை வெளிஉறவு அமைச்சராக ,செயலராக நியமிக்க வேண்டும் இந்தியா இனியாவது தமிழர்களின் இன உணர்விற்கு மதிப்பு அளித்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் .மனித நேய ஆர்வலர்கள் இந்தியாவிடம் அதைதான் எதிர் பார்க்கின்றோம் .உலகில் சில ஆண்டுகளுக்கு முன் 50 நாடுகள் மட்டுமே இருந்தது .ஆனால் இன்று 193 நாடுகள் உள்ளது .ஐநா மன்றத்தில் 193 கொடிகள் பறக்கின்றன.194 வது கொடியாக தமிழ் ஈழக் கோடி பறக்க உதவ வேண்டும் .உலகத்தமிழர்கள் யாவரும் இன்று ஒரே குரலில் ஈழத்தில் தனி நாடு அமைத்துக் கொடுக்க உதவ வேண்டும் .முடிந்தால் உதவுங்கள் .முடியாவிட்டில் தள்ளி நில்லுங்கள் .ஒரு நாள் தனித் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்






கருத்துகள்