ஹைக்கூ ஆற்றுப்படை நூல் விமர்சனம் முனைவர் , பேராசிரியர் இராம .குருநாதன்


ஹைக்கூ ஆற்றுப்படை

நூல் விமர்சனம் முனைவர் , பேராசிரியர் இராம .குருநாதன்

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ வடிவக் கவிதை வளர்ச்சி மலரும் புலர் பொழுதுகளில் இருந்து விடுபட்டு மெலிந்து போய்விட்ட உணர்வு இருந்து வருகிறது .அந்தக் கவலை நீங்கும் நாள் எந்நாளோ என்று நினைக்கையில் ஊட்டச்சத்தாக வெளிவந்து இருப்பது கவிஞர் இரா .இரவி எழுதியுள்ள
ஹைக்கூ ஆற்றுப்படை என்னும் நூலாகும் .ஒரு படைப்பாளியை இன்னோரு படைப்பாளி நன்கு அறிந்து கொள்வது இயல்புதானே .ஹைக்கூ கவிஞரான கவிஞர் இரா .இரவி தன்னொத்த ஹைக்கூக் கவிஞர்களின் படைப்புகளைத் திறம்பட திறனாய்வு செய்துள்ளார் .
கவிஞர் ஒவ்வொரு நாளையும் கூர்ந்தறிந்து தமக்கே உரிய பாணியில்
மதிப்பீடு செய்துள்ளார்.படைப்பாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் தம் கண்ணோட்டங்களை நடுநிலையோடு திறனாய்கிறார்.படைப்பாளி ஒரு நல்ல சுவைஞனாக இருக்கும் நிலையில் இது சாத்தியமே .கவிஞர் இரா .இரவிதாம் படித்துச் சுவைத்திருக்கும் நூல்களில் இருந்து திரட்டித் தந்துள்ள பாடல்களும் ,அவற்றின் மீதான கருத்தோட்டங்களும் அவர் நுனிப்புல் மேய்பவர் அல்லர்என்பதனை நிலைநாட்டும் .அவர் நுணுகி ஆய்ந்து சுவைத்த ஹைக்கூ மேற்கோள்கள் அனைவரையும் ஈர்க்கச் செய்யும் .ஹைக்கூ என்றால் என்ன என்பதனை எளிமையான விளக்கத்தால் சொல்லி அதற்கானஎடுத்துக்காட்டைச் சுவைபடத் தந்துள்ளதைப் பலவாறு புகழ்ந்துரைக்கலாம் .அமுதபாரதியின் ஹைகூகளைப் பற்றிச் சுருக்கமாகத் தொடக்கத்திலேயே குற்றால் அருவியில் குளித்து முடித்த இன்பம் கிடைக்கிறது .என்று சொல்லி நூலில் நுழையச் செய்கிறார் .கவிஞர் மு .முருகேஷ் எழுதிய நிலா முத்தம் என்னும் நூலினைச் சுவைத்த கவிஞர்,முழு நிலவு நாளன்று அமைதியாகத் தனிமையில் நிலவை ரசித்த இன்பத்தைத் தருகின்றதுஎன்று எழுதியுள்ளமை மு .முருகேஷ் கவிதைகளைப் படிக்கத் தூண்டும்.
இன்றைய சூழ்நிலையில் இயற்கையை இரசிக்க மனிதனுக்கு நேரம் இல்லாது போய் விட்டது .அதனை ஹைக்கூவிலாவது ரசிக்கலாமே என்ற தம் ஆதங்கத்தையும் ,ஆர்வத்தையும் சிபி எழுதியுள்ள மகரந்த ரகசியங்கள் என்ற நூலிற்கான மதிப்பீட்டை அழகுற மொழிந்து உள்ளதை ஏற்கும் அதே வேளையில் அந்த நூலாசிரியருக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறார் .இன்வரும் காலங்களில் பட்டாம்
பூச்சி ,பனித்துளி தவிர்த்துப் பாடுங்கள் .நீங்களே நிறைவாகப் பாடி உள்ளீர்கள் .என்று கூறி இருப்பது ,அன்பின் பொருட்டே ,அது கூறியதாகாது . இயற்கைக் காட்சிகள் ஊடே வாழ்வியலை வடித்து வட்டிலில் வடிவதை
சிமிழுக்குள் செதுக்கும் வித்தையோடுமட்டும் விளங்கி நிற்பதில்லை இன்றைய ஹைக்கூப் பாடுபொருள்ஹைக்கூ இன்றைய நடப்பு நிலைகளையும் எடுத்துக் காட்டப் பயன் படுகிறது .ஹைக்கூ வடிவம் அதற்கும் அடிபணிந்துள்ளது .குறிஞ்சி பூக்கள் என்னும் வீ .தங்கராசுவின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இன்றைய நடப்பைச் சித்தரிக்கும் ஒரு ஹைக்கூ கவிஞர் இரவியால் அடையாளப் படுத்தப் பட்டுள்ளது .இது அந்த ஹைக்கூ .

தேர்தல் கமிசன் பெயரே சரியில்லை
தேர்தலுக்குப் பின் எல்லாமே
கமிசன் மயம்

இது வருவது உரைத்தலா ? வந்தது உரைத்தலா ? என்னும் அளவிற்கு இன்றிய நடப்பினைக் காட்டுகிறது .பரிமளம் சுந்தரின் ஆய்வேடான ஜப்பானிய -தமிழ் ஹைக்கூக் கவிதைகள் ஓர் ஒப்பாய்வு என்ற நூல் பற்றிய இரவியின் கருத்துக்கள் சரியான மதிப்பீடாகத் திகழ்கிறது .
ஹைக்கூ பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்குரிய செய்தியாக அவர் கூறி இருக்கும் கருத்தான ,ஹைக்கூ பற்றி குறைவான மதிப்பிடு உள்ளவர்கள் இந்நூலைப் படித்தால் மாறுவது உறுதி .என்று ஹைகுப் பற்றி மாறான கருத்துக் கொண்டோரை வசை பாடாமல் கனிவோடு கடிதோச்சும் பண்பினைக் கவிஞர் இரா .இரவி வசம் காண்கிறோம் .
கவிஞர் நாணற் காடனின் கவிதைத் தொகுப்பை கவிஞர் படித்ததும் எழுதுகிறார் .கடுகு சிறியதுதான் காரம் பெரிது .அது போல ஹைக்கூ வடிவம் சிறியதுதான்.அனால் தாக்கம் பெரிது .என்று சுட்டி இருப்பது ஹைக்கூ பற்றிய எளிய விளக்கம் .ம .ஞானசேகரனின் இரு ஹைக்கூ நூல்களை ரசித்து எழுதியுள்ள கருத்துக்கள் இனிமை .அருமை .தமிழ்மணி ,விநாயமூர்த்தி ,கவிமுகில் ,வசீகரன், கன்னிக்கோயில் ராஜா,தமிழ்நெஞ்சன்,அமரன் ஆகியோரது ஹைக்கூக் கவிதைகளில் மனம் பதித்துக் கவிஞர் இரா .இரவி உளந்தோய எழுதி உள்ள கருத்துக்கள் .அவர் ஒரு படைப்பாளி மட்டும் அல்ல ,நல்ல திறன் ஆய்வாளர் என்பதனை மெய்பிக்கும் .அதனை எண்ணிப் பெருமிதம் அடையலாம் .அந்த அளவிற்கு அவரது ஹைக்கூக் குறித்த மதிப்பீடுகள்நூலை உயர்த்துவன .பலரிடம் கொண்டு செல்லும் தூதுவனாக விளங்குவன .
ஆற்றுப்படை என்பதன் இலக்கணமே தாம் பெற்றதை அடித்தவருக்கு எடுத்துச் சொல்லி அவரும் தக்கவாறு பயன் கொள்ளச் செய்வதுதான் என்பதற்கு எடுத்துக்காட்டாக நூலின் தலைப்பினைத் தெரிவு செய்து இருப்பது போற்றுதற்குரியது

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

கருத்துகள்