கண்ணகி நீதி கேட்ட மதுரையில் எழுச்சி

கண்ணகி நீதி கேட்ட மதுரையில் எழுச்சி

26.6.2011 மாலை6 மணிக்கு

உலக மனித சித்திரவதை எதிர்ப்பு நாளை முன்னிட்டு ஈழத்தில்உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ,சென்னை செல்ல வாய்ப்பு இல்லாதவர்களுக்கு மதுரையில் தமுக்கம் ,தமிழன்னை சிலை அருகில் ஈழத்தமிழர் கூட்டமைப்புகள்
மதுரை, சார்பில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு அனைத்து அமைப்புகள் சார்பாக பெருமளவில் கலந்து கொண்டு எழுச்சி முழக்கம் இட்டனர் .பொறியாளர் தளபதி, பாண்டியன் ,தமிழ் கூத்தன்,செந்தில் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்து இருந்தனர் .கவிஞர்கள் இரா .இரவி ,பொன் விக்ரம் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர் .நாம் தமிழர், ம .தி .மு .க ,தமிழர் தேசிய பொதுவுடைமை ,பெரியார் தி .க உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் .குழந்தைகள் ,பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .உலக மகாக் கொலைகாரன் ராஜபட்சே உடனடியாகத் தூக்கில் இடப்பட வேண்டும். சேனல் 4 கொடூர காட்சியில் கண்டக் காட்சிகளுக்கு நீதி வேண்டும் .போர் குற்றவாளிகள் உடனடியாகத் தண்டிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப் பட்டது

கருத்துகள்