நர்த்தகி இயக்கம் G.விஜயபத்மா திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா ,இரவி


நர்த்தகி
இயக்கம் G.விஜயபத்மா

திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா ,இரவி

அதிசயம் ஆனால் உண்மை .திரை அரங்குகளில் ரூ 200,ரூ 150,ரூ 100வாங்கும் காலத்தில் ,மதுரை ஷா .திரைஅரங்கில் வெறும் ரூ20
மட்டும் பெற்றுக்கொண்டு நுழைவுச் சீட்டு வழங்கினார்கள் .மிகக் குறைந்த கட்டணம் .அதற்காகவே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
திருநங்கைகளின் உள்ளத்து உணர்வுகளை உண்மையை அப்படியே படம் பிடித்து காட்டிய முதல் திரைப்படம் .கல்கி என்ற திருநங்கையின் கதையை அப்படியே மலரும் நினைவுகளாகப் படம் பிடித்து உள்ளனர் .இந்தப்படத்தை மிக தையிரியமாகத் தயாரித்த புன்னகை பூ கீதாவைப் பாராட்ட வேண்டும் .திருநங்கைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை, மன வலியை,வேதனையை விளக்கும் மிக நல்ல திரைப்படம் நர்த்தகி .
கதை ,திரைக்கதை, வசனம் இயக்கம் G.விஜயபத்மா . மிகச் சிறப்பாக ஒரு திருநங்கை எப்படி? உருவாகுகின்றனர் .என்பதை மிக விளக்கமாக திரையில் காட்டி உள்ளார் .G.V.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளது .பாடல் ஆசிரியர் நர். முத்துக்குமார் பாடல் வரிகள் சிந்திக்க வைக்கின்றது .ஒளிப்பதிவாளர் M.கேசவன் படத்திற்கு பலம் சேர்த்து உள்ளார் .இதுவரை வந்த பெரும்பாலான திரை ப்படங்களில் திருநங்கைகளை கேலியாகவே சித்தரித்து உள்ளனர் .முதன் முறையாக இந்தப் படத்தில்தான் திருநங்கையை கதையின் நாயகியாகச் சித்தரித்து உள்ளனர் .முதல் முயற்சியில் வெற்றிப் பெற்றுள்ளனர் .இந்தப் படத்திற்கு விருது வழங்கலாம் .
சிறுவன் சிறுமியாக இருக்கும் போதே ,இவன்தான் உன் கணவன் ,இவள்தான் உன் மனைவி என்று சொல்லி வளர்க்கும் கிராமத்து மூடநம்பிக்கையைச் சாடி உள்ளனர் .ரத்த சொந்தகளுக்குள் திருமணம் செய்ய வேண்டாம் என்று இன்று ஆய்வுகள் சொல்கின்றன .பல விழிப்புணர்வை விதைக்கும் விதமாக படம் உள்ளது .பாராட்டுக்கள் .
குழந்தைகளிடம் தேவையற்ற ஆசைகளை வளர்த்து விடாதீர்கள் என எச்சரிக்கை செய்கின்றது படம் .

சிறுவனுக்கு ஜோடியாக மாமா மகளைச் சொல்லி வளர்க்கின்றனர் .நாளைடைவில் அவனுக்குள் அவள் என்ற உணர்வு வருவதை மாமா மகளிடம் சொன்னால் அவள் ஏற்க மறுக்கிறாள் .சிறு வயதில் இருந்த காதலித்த அவளுக்கு ஏமாற்றம் .தந்தை சிலம்பம் ஆசிரியர் .அவர் மகனுக்கு சிலம்பம் சொல்லித் தருகிறார் . ஆனால் அவனோ சிலம்பம் சொல்லிதரும் போது நாட்டியம் ஆடுகிறான் .அப்பா சினம் கொள்கிறார். அம்மா ஆடும் போது உடன் ஆடிப் பழகுகின்றான் .வீட்டில் சகோதரிகளின்
சட்டை ,பாவாடையை போட்டுப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறான் .பாஸ்கர் என்ற நண்பன் தொட்டபோது பெண்ணாக உணர்கிறான் .தன்னுள் உள்ள பெண்மையை அம்மா ,அப்பாவிடம் சொன்னபோது ஊருக்குப் பயந்து அவனை அடித்து விரட்டுகின்றனர்.மாமா மகளிடம் பணம் பெற்று ஊரை விட்டுச் செல்கின்றான் . திருநங்கைகளின் உதவியுடன் மும்பை செல்கிறான் .அங்கு சென்று அவன் அவளாக மாறுகின்றாள் .அவள்தான் கல்கி .மும்பையில் திருநங்கையாக மாறுவதற்கு அங்கு நடக்கும் சடங்குகள் மிக விரிவாக படமாக்கி உள்ளனர் .மும்பை திருநங்கைகள் இந்தியில் பேசுவதை தமிழாக்கம் செய்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் .
அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியதும் பாலியில் கொடுமை நடக்கின்றது .மனம் வெறுத்து பக்கத்துக்கு வீட்டு மலையாளப் பெண்ணிடம் நாட்டியம் பயில்கின்றாள்.பின் அவள் ஆலோசனையின் பெயரில் திருவையாறு வருகிறாள் .நாட்டிய ஆசிரியரை தந்தையாக மதித்து அவரிடமும் நாட்டியம் பயில்கின்றாள்.அவர் இறந்து விடுகிறார் .மில் அதிபர் மகன் வருகிறான் கல்கியைக் காதலிக்கிறான் .தாலி கட்டி மனம் முடிக்கிறான் .தங்கி சுகம் கண்டுஏமாற்றி செல்கிறான் .அவனைத் தேடிச் சென்று அவன் அப்பாவை சந்திக்கும் போதுதான் உண்மை தெரிகின்றது .வருடமாகக் குழந்தை இல்லை.சோதிடர் பரிகாரம் சொல்கிறார் குழந்தை பிறக்க திருநங்கையை அணைந்தால் பிறக்கும் என்று சொன்னதற்காக கல்கியை ஏமாற்றியது அறிந்து கவலை கொள்கிறாள் கல்கி .
கல்கி பாரத நாட்டிய கலைஞராக வளர்ந்து விடுகிறாள் .
கல்கியின் குழந்தைப் பருவத்து சிறுவர்களாக நடித்த இருவரும் ,மாமா மகளும் ,மாமாவும் அப்பாவும் அம்மாவும் அனைவரும் போட்டிப் போட்டு நடித்து உள்ளனர் .உள்ளதைக் கொள்ளை கொள்கின்றனர் .பாராட்டுக்கள்.
திருநங்கையை பெற்றோர்களே வெறுக்காதீர்கள் ஒதுக்காதீர்கள் அன்பு செலுத்துங்கள் என்று புத்தி புகட்டும் சிறந்த படம் . திருநங்கைகள் பற்றி விழிப்புணர்வு விதைக்கும் விதமாக வந்து உள்ள நல்ல படம் ..படம் பார்த்த வந்தவுடன் ஒரு ஹைக்கூ வந்தது எனக்கு .

குழந்தை பிறத்தது
திருநங்கையை ஏமாற்றியவருக்கு
திருநங்கையாக

கருத்துகள்

கருத்துரையிடுக