பின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி


பின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி


ஒழிக்கப்படவேண்டியது தீவிரவாதம்தான் .தீவிரவாதி அல்ல .பின்லேடன் ஏன்? தீவிரவாதியானான் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் .உலக ரவுடியான அமரிக்கப் படை எங்கு சென்றாலும் ,எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் வெளிய வருவது இல்லை . .வியாட்னாமிலும்அமரிக்கப் படை இன்னும் உள்ளது .ஆப்கானிஷ்தானிலும்,ஈராக்கிலும் அமரிக்கப் படை இன்னும் உள்ளது . அமரிக்கப் படையின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் மாண்டு உள்ளனர் .
அணு ஆயுதம் வைத்துள்ளார் என்று சதாமைக் கொன்றார்கள் .கடைசிவரை அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடு என்பதற்காக எதுவும் செய்யலாம் என்பது தவறு .தவறு யார்? செய்தாலும் தவறுதான் .சில ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான பின்லேடனைக் கொன்றார்கள் .ஆனால் சில லட்சம் பேர் சாவுக்கு காரணமான ராஜபட்சேயை கொல்ல அமெரிக்க முன் வருமா ?வராது .காரணம் அமெரிக்காவில் இறந்தது அமெரிக்கர் .இலங்கையில் இறந்தது தமிழர் .ஏன் ?
ந்தப் பாகுபாடு .இலங்கையில் பெட்ரோல் கிணறுகள் இல்லை பின்லேடன் படுகொலையோடு இது முடிந்துவிடுமா? யோசிக்க் வேண்டும் ?பின்லேடன் ஆதரவாளர்கள் இருப்பார்கள் அவர்களை மூளைச் சலவை செய்து வன்முறைக்கு வழி வகுப்பார்கள். அமெரிக்காவின் இந்த பலி வாங்கும் செயலால் உலக அமைதி கேள்விக் குறியானது .பின்லேடனை கொல்லாமல் சிறைபிடித்து இருக்கலாம். அமெரிக்கா வினை விதைத்துவிட்டது .
சரிந்து வந்த ஓபாமாவின் செல்வாக்கை உயர்த்த பின்லேடன் படுகொலை பயன்படலாம் .ஆனால் இதையும் வன்முறையாகவே பார்க்கிறேன் நான் . உலக அளவில் மனிதநேய ஆர்வலர்கள் யாரும் பின்லேடன் படுகொலையை விரும்பவில்லை .இதற்காக அமரிக்க மக்கள் மகிழ்வதும் தவறு .ஓபாமா இந்தியா வந்த போது காந்தியத்தை மதிப்பவன் என்று சொன்ன சொல் பொய்யானது .

கருத்துகள்

  1. ஒழிக்கப் பட வேண்டியது தீவிரவாதம் மட்டுமே, தீவிரவாதிகள் அல்ல என்பதில் நான் உடன் படுகிறேன். பின்லேடனைக் கொண்றதைக் குறித்து தவறு கூற முன்வடரமுடியாது அவன்(அமெரிக்கன்) பளமையான கலாச்சாரம் இல்லதவனாகிலும், இனமானம், தன்மானம் போன்றவை அதிகமே கொண்ட தலைவர்களைக் கொண்ட நாடு தான் அமெரிக்கா. நீங்கள் சொன்னது போல் அமெரிக்கர்களை கொன்றொடுக்கிய கயவன் என்பதால் பின்லேடன் கொல்லப் பட்டான், தமிழர்களை கொன்றொடுக்கிய ரஜபக்சேவுக்கு இங்கு தமிழன் விருந்து வைக்கிறான், கூத்தடிக்கிறான். காகிதத்தில் மட்டுமே எழுதப் படும் தமிழர் தலைவர் இருப்பதால் தான் இந்த நிலை.
    ரஜபக்சே தண்டிக்கப் படவேண்டும் என்று ஐ.நா.சபை கூறிய பிற்பாடும், தமிழகத்தில் எத்தனை தலைவர்கள் அதை ஏற்றுக் கோள்ளவில்லை என்பதை செய்தித்தாள்கள் சாட்சி...

    இனமானத்தோடு போரடி இதையாவது ஒபாமா செய்தாரே என்று சந்தோஷப் படுங்கள் கவிஞர் அவர்களே...

    -மொ.இளயவன்-

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக