இதயத்தில் ஹைக்கூ

தமிழ் ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகள்











இனிய நந்தவனம் வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / பீர்முகம்மது
ஹைக்கூ திலகம் எனப் பட்டம் பெற்ற கவிஞர் இரா.இரவியின் ஏழாவது ஹைக்கூ தொகுப்பு நூல் "இதயத்தில் ஹைக்கூ ". வினைபுரியும் வீரிய விதையாய் என்ற தலைப்பில் மு.முருகேஷ் அணிந்துரையும், ஹைக்கூவுக்கு அமுதென்று பேர் என்ற தலைப்பில் இரா.மோகன் அவர்கள் அணிந்துரையும் சிறப்பு. ஒவ்வொரு கவிதைக்கும் படங்கள் வைத்து கவிதையா, புகைப்படக் கண்காட்சியா என வியக்க வைக்கிறது 72 பக்கத்தில் 434 ஹைக்கூ கவிதைகளும். "அவள் நினைவலைகளில் நான், என் நினைவலைகளில் அவள் காதல் அலைவரிசை" என்ற கவிதையும், "இதழ் சொல்லும் விழிகள் சொல்லாது பொய்" என்ற காதல் ரசனைமிக்க வரிகள், "இனிக்கவில்லை வாழ்க்கை, கரும்பு நட்டத்தில் நட்டம்" என்ற விவசாயிகளின் கவலையின் வெளிப்பாடு, "அப்பா மது போதையில், அம்மா தொலைக்காட்சி போதையில், வாழ்க்கைப் போராட்டம் நடைபாதையில்" என சீரியல் மோகத்தை விளக்குகிறார். மதுரை ஆர்.ஆர். டிசைனர்ஸ் ஓவியமும் வடிவமைப்பும் புத்தகத்தை மேலும் மெருகூட்டுகின்றது.

கருத்துகள்