தன்னம்பிக்கை ஹைக்கூ….கவிஞர் இரா. இரவி



தன்னம்பிக்கை ஹைக்கூ….கவிஞர் இரா. இரவி
வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!
இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால்
முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…
தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற
வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை!
வயது தடையல்ல! எந்த வயதிலும்
புரியலாம் சாதனை.
உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை.
உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை
குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை
உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை
இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை
தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்
மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும் புரியலாம் சாதனை

கருத்துகள்