ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மன்னராட்சியையும் வென்றார்கள்
அரசியல்வாதிகள்
குடும்ப அரசியிலில்
மனிதனால் படைக்கப்பட்டு
மனிதனையேப் படுத்துகின்றது
பணம்
எங்கு ?முறையிடுவது
ஆண் காவலர்களால்
பெண் காவலர்களுக்குத் தொல்லை
அவள் தந்த
சங்கு பயன்பட்டது
இறுதி ஊர்வலத்திற்கு
சவுக்குமரம்
பார்க்கையில்
அவள் நினைவு
தமிழைக் காத்ததில்
பெரும்பங்குப் பெற்றன
பனை மரங்கள்
தமிழை அழிப்பதில்
பெரும்பங்குப் பெற்றன
தொலைக்காட்சிகள்
மூடநம்பிக்கையால்
முற்றுப் பெற்றது
சேதுகால்வாய்த் திட்டம்
இடித்ததால்
இடிந்தது மனிதநேயம்
பாபர் மசூதி
எட்டாவது அதிசயம்
ஊழலற்ற
அரசியல்வாதி
மூச்சுக்காற்று வெப்பமானது
ஏழை முதிர்கன்னிக்கு
தங்கத்தின் விலையால்
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
கருவறையில் உயிர்ப்பு
கல்லறையில் துயில்வு
இடைப்பட்டதே வாழ்க்கை
எல்லோரும் சிரிக்க
அழுது பிறந்தது
குழந்தை
எல்லோரும் அழ
அமைதியாக இருந்தது
பிணம்
நடமாடும் நயாகரா
நடந்துவரும் நந்தவனம்
என்னவள்
பெயருக்கு காதலிக்கவில்லை
பெயரையே காதலித்தேன்
மலரும் நினைவுகள்
அதிக வெளிச்சமும்
ஒருவகையில் இருட்டுத்தான்
எதுவும் தெரியாது
கூந்தல் மட்டுமல்ல
வாயும் நீளம்தான்
அவளுக்கு
ஐயா! எல்லாம் மிக அற்புதம், சுவை மிகுந்த ஹைக்கூக்கள்.. என் போன்ற ஈ மொய்க்கும் கவிப்பூக்கள். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு