கவிதை அல்ல விதை

சிகரம் வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / சந்திரா மனோகரன்)கவிஞர் இரா.இரவியின் இலக்கியப் பயணத்தில் இது எட்டாவது மைல் கல் என்று அவரே தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அவருடைய இணையதளமான 'கவிமலர் டாட் காம்' -ல் பார்த்த இலட்சக்கணக்கான வாசகர்கள் பாராட்டிய கவிதைகளே இவை என்பது இன்னும் சிறப்பு. வித்தகக் கவிஞர் பா.விஜய் மற்றும் தமிழறிஞர் தமிழண்ணல் ஆகியோரின் அற்புதமான அணிந்துரைகள் இந்நூலினை மேலும் மெருகூட்டுகின்றன. 'ஹைக்கூவின் மறுபெயர்தான் இரவி' என்ற தமிழண்ணலின் பாரட்டுக்கு முற்றிலும் பொருத்தமானவர் தான் இந்நூலாசிரியர்.

தனது முதல் கவிதை குறளுக்கு அர்ப்பணம், தொடர்ந்து பாரதி (குடும்ப அட்டையில் 'எச்' முத்திரை குத்தியிருக்கமாட்டான், ஏன் தெரியுமா? / இன்றும் அவனது வருமானம் / அய்யாயிரத்திற்கும் கீழ்தான் இருந்திருக்கும். - பக்கம் 14 ) அப்புறம், பாரதிதாசன், நேதாஜி, காமராஜர், தெரசா என்று ... கவிதைத் தோரணம் நீளுகிறது. கலாம் அறிவுக்குச் சலாம் போடும் கவிதைப் புநையல்களில் மூழ்கிக் குளிக்கலாம். (கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே - பக்.34 ) அவரது குடும்பத்தின் மக்களையும் கவிதைச் சாரலுக்குள் நனையவிட்டிருக்கிறார். எளிய நடையில், பொலிவான வடிவமைப்பு, மனதில் நெருப்பு உள்ள (நன்றி - பா.விஜய்) கவிஞர் இரா.இரவி இப்படைப்பின் மூலம் வாசகர்களைச் சுட்டு விடுகிறார்

இனிய நந்தவனம் வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / பீர்முகம்மது)
கவிஞர் இரா.இரவியின் எட்டாவது படைப்பான கவிதைத் தொகுப்பு நூல் "கவிதை அல்ல விதை" கடந்தகால சமூக நிகழ்வுகளை வரிகளால் படம் பிடித்துக் காட்டும் பெட்டகமாக இலக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த வல்லவரே என்று தமிழின் இமயம் திருவள்ளுவர் என்று தொடங்கி தன்னம்பிக்கை வரை 70 கவிதை விதைகளை பதியச்செய்திருக்கிறார். தன்னம்பிக்கை குறித்த பொங்குமே வாழ்வு என்ற கவிதையும், விவேகமானவனுக்கு வெற்றியைக் கொடு, அதுவும் தொண்டு என்ற தொண்டு கவிதையும் மனதைத் தொடுவதாக உள்ளது. மண் பயனுறவேண்டும் என்றாய் அன்று, விளை நிலங்களெல்லாம் வீடுகளாது இன்று என்று பாரதியையும், பகுத்தறிவைப் பாடல்களில் தந்த பாட்டுச் சித்தர் என்ற கவிதைக்குள்ளும் மிகப்பெரிய பரிணாம மாற்றத்தை உண்டாக்கியுள்ளது என்றால் மிகையாகாது என்ற வித்தகக் கவிஞர் பா.விஜய் அணிந்துரையும், ஹைக்கூ கவிதைகளைக் கருவியாகக் கொண்டு தமிழுணர்வையும் பண்பாட்டையும் பரப்பி வருபவர் கவிஞர் இரவி என்று தமிழண்ணல் அணிந்துரையும் கூடுதல் சிறப்பு.
உங்கள் பாரதி வழங்கிய மதிப்புரை ; ( - - - - - - / ஆசிரியர் குழு)
நூலாசிரியர் கவியரங்குகளில் வாசித்த கவிதைகளையும், அவர் நேசித்த தலைவர்கள், கவிஞர்கள் பற்றியும் எழுதிய கவிதைகளையும் நூலாக்கியிருக்கிறார். வித்தகக் கவிஞர் பா.விஜய், தமிழறிஞர் தமிழண்ணல் ஆகியோர் உரை வழங்கியிருக்காறர்கள். உலகப் பொதுமறை, தமிழின் இமயம் திருவள்ளுவர், மகாகவி பாரதியார், அன்னை தெரசா, கண்ணதாசன், வெல்லும் தமிழ் இனி வாழும், எயிட்ஸ் போன்ற தலைப்புளில் கவிதைகளைத் தந்துள்ளார். இலக்கணம் பார்க்காமல் கருத்துப் புதையல்களை சிவைக்கச் சரியான நூல்.

கருத்துகள்

 1. நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  www.eraeravi.com
  www.kavimalar.com
  eraeravi.wordpress.com
  eraeravi.blogspot.com

  http://eluthu.com/user/index.php?user=eraeravi
  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக