என்ன செய்ய நினைத்தாயோ ?தமிழ்ச் சாதியை
கவிஞர் இரா .இரவி
அன்று முத்துக்குமார்
இன்று கிருஷ்ண மூர்த்தி
நாளை யாரோ ?
விலைமதிப்பற்ற
உயிரைத் தந்து
உலகின் கவனம்
ஈர்த்தபோதும் .
உலகின் கவனம்
ஈழத்தமிழரின் பால்
இன்னும் வரவே இல்லை .
கொலைவெறியன்
கொடூரன் ராசபட்சே
இன்னும் தண்டிக்கப் படவில்லை .
நான்கு மீனவர்களைக் கொன்று
நடுக் கடலில் வீசிய கொடுமையை
தட்டிக் கேட்க நாதி இல்லை.
கொலைக்காரன் ராசமரியாதையுடன்
கிரிக்கெட் பார்த்துச் செல்கிறான்
கோடிப் பணங்களையும்
கேடி வாங்கிச் செல்கிறான்
என்ன செய்ய நினைத்தாயோ ?தமிழ்ச் சாதியை
--
கருத்துகள்
கருத்துரையிடுக