முட்டாள்கள் தினத்தன்று மூடன் வருகிறான் திருப்பதியை வணங்க கவிஞர் இரா .இரவி


முட்டாள்கள் தினத்தன்று
மூடன் வருகிறான் திருப்பதியை வணங்க
கவிஞர் இரா .இரவி

வரவேற்பு வழங்க மூடன்கள்
அணிவகுப்பு நடக்கும்

செய்த கொலை பாதகம்
ஜென்மத்திற்கும் தீராது

பாவத்தின் பங்கைத் திருப்பதியிடம்
பகிர்ந்துக் கொள்ள வருகிறான்

பாவத்திற்கான சம்பளம் உனக்கு
பாவியே நிச்சயம் உண்டு

உலக மகா யோக்கியன் வருகிறான்
உடன் செம்பைத் தூக்கி உள்ளே வை

லட்சக் கணக்கில் தமிழர்களைக்
கொண்ட கொலைகாரன்

தமிழர்களின் வரிப் பணத்தில்
இயங்கும் இந்தியா வந்து செல்கிறான்

காங்கிரசே உனக்கு தமிழர் வேண்டுமா ?
சிங்களக் கொடியவன் வேண்டுமா ?

தேர்தல் நேரம் நல்ல முடிவை எடு
தேர்தலில் தோற்று வருந்தாதே

--

கருத்துகள்