ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள்
கவிஞர் இரா .இரவி
அணுகுண்டு போட்டார்கள்
புல் பூண்டு கருகியது
உயிர்கள் ஒழிந்தது
உயரம் குறைந்தது
உழைத்தார்கள் ஓய்வின்றி
உழைத்தார்கள்
உலகின் உச்சம்
தொட்டார்கள் .
சுனாமி வந்தது
சும்மா புரட்டிப் போட்டது
அணு உலை வெடித்தது
ஆருயிர்கள் மடிந்தது
உழைப்பார்கள் ஓய்வின்றி
உழைப்பார்கள்
உலகின் உச்சம்
மீண்டும் தொடுவார்கள்.
விதியை நினைத்து
வீழ்ந்து கிடக்க மாட்டார்கள்
மதியைப் பயன்படுத்தி
மற்றட்ட வளர்ச்சிக் காண்பார்கள்
தோல்விக்குத் துவளாத
வைர நெஞ்சம் பெற்றவர்கள்
சோகதிற்குச் சோர்ந்திடாத
இதயம் படைத்தவர்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக