பாசக்கார நண்பர்களுக்கு பிரிவு உபசாரக் கவிதை ' கவிஞர் இரா .இரவி
(+2 மாணவர்களுக்கு +1 மாணவர்களின் வாழ்த்து )
வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது பள்ளியில்
வரலாறுப் படைக்க இருக்கும் நண்பர்களே
மருத்துவர் பொறியாளர் ஆசிரியர் எவரான போதும்
மறக்க வேண்டாம் நமை வளர்த்த பள்ளியை
மேல் நிலை நாம் அடைய அயராது உழைத்த
மேன்மைமிகு ஆசிரியர்களை மறக்க வேண்டாம்
அன்பான நம் தலைமை ஆசிரியரையும் மறக்க வேண்டாம்
அலுவலகப் பணியாளர்களையும் மறக்க வேண்டாம்
பசுமரத்து ஆணியாகப் பதிந்தது உங்கள் நினைவு
பிரிய மனமில்லை என்றபோதும் தேவையான பிரிவு
கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்
இனி இனிய பள்ளி வாழ்க்கைத் திரும்பக் கிடைக்காது
வசந்த காலத்தை இனிதே முடித்து
கல்லூரி செல்ல இருக்கும் நண்பர்களே
கூட்டல் இரண்டு முடித்துச் செல்வதால்
இனி வாழ்க்கையில் கூட்டல்மட்டுமே கழித்தல் இல்லை
இனிமையான நினைவுகளை இதயத்தில் தேக்கி
கனத்த இதயத்துடன் விடைபெறும் நண்பர்களே
முதல் வருடம் இரண்டாம் வருடம் வேறுபாடு இன்றி
முது நிலை இள நிலை இடைவெளி இன்றிப்பழகினோம்
வேடந்தாங்கலில் கூடிய பறவைகளாய் இணைந்தோம்
வேண்டியமட்டும் அன்போடு அனைவரும் பழகினோம்
வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடைவது உறுதி
வாழ்த்தி வழி அனுப்புகிறோம் நாங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக