தூங்காநகரம் இயக்கம் கெளரவ் விமர்சனம் கவிஞர் இரா .இரவி



தூங்காநகரம்
இயக்கம் கெளரவ்
நடிப்பு விமல் ,கெளரவ்
தயாரிப்பு தயாநிதி அழகிரி


விமர்சனம்
கவிஞர் இரா .இரவி

தூங்காநகரம் இன்னொரு பருத்திவீரன்
மற்றொரு சுப்புரமணிபுரம் என்றால் மிகை அன்று .
இயக்குனர் கெளரவ் முதல் படத்திலேயே முத்திரைப் பதித்து உள்ளார்
பாராட்டுக்கள் .இயக்குனர்கள் மகராசன் ,கே எஸ் .ரவிக்குமார்
பலரிடம் உதவி இயக்குனராக பல ஆண்டுகள் பயிற்சிப் பெற்று
பெற்றப் பயிற்சியை திறம் பட பயன்படுத்தி உள்ளார் .
யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனையான முடிவு .
படத்தின்இறுதியில் மனதை கனமாக்கி மகிழ்ச்சிப் படுத்தி விட்டார் .
நட்பிற்கு இலக்கணம் கூறும் நல்ல படம் .
வைகைப்புயல் வடிவேலு குரலில் கதை நாயகர்கள்
அறிமுகம் சிறப்பு .

இயக்குனர் சிங்கம்புலி முன்பகுதியில்
நகைச்சுவையில் கலக்கி உள்ளார் .
பின்பகுதி மிக விறுவிறுப்பாக உள்ளது .
இரண்டு கிழவிகள் நடத்தும் ரவுசு
அப்பப்பா நல்ல நகைச்சுவை.
அக்கினி நட்சத்திரம் படத்தில்
பிரபு கார்த்திக் நடக்கும் போது
மோதிக்கொள்ளும் முறையில்
கிழவிகள் மோதல் நன்று .
இயக்குனர் கெளரவ் மதுரை வடக்குமாசி வீதியில்
வளர்ந்த காரணத்தால் வடக்குமாசி வீதி வழுக்குமரம்
திருவிழா மற்றும் மதுரையை மிக இயல்பாக
படமாக்கி வெற்றி பெற்றுள்ளார்

.
கவிஞர் மூரா விமலின் தந்தையாக மிகஇயல்பாக
நடித்து. உள்ளார் அவர் மட்டும் அல்ல கதாநாயகி
அஞ்சலி உள்பட அனைவரும் சிறப்பாக நடித்து.உள்ளனர் .
பிம்பம் பற்றிய கவலை இன்றி இயக்குனர் கெளரவ்
சுடுகாடு வெட்டியானாக மிகஇயல்பாக
நடித்து. உள்ளார் .
ஊமையாக மாற்று திறனாளியாக
நடித்துள்ள நண்பனிடம்
தன் குடும்பத்தை வில்லன் கொன்று
விடுவோம் என்று மிரட்டி நண்பனை கொல்லச் சொல்லியதும்

நண்பனுக்கு லட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு
மானசாட்சி கேட்காமல் உடன் கொடுத்த லட்டை
பிடுங்கி செல்வதும் உருக்கமான காட்சி .

நண்பனின் மனைவி வளைகாப்பில் பிணமாக கற்பனை
செய்து சிரித்ததற்காக நண்பர்களிடேயே ஊடல் .
நண்பனுக்கு விபத்து என்றவுடன் உயிர் காக்க
துடிப்பது ,போதையில் இருந்ததால் இரத்தம்
எடுக்க மறுத்ததும் ,காதலியை பிடித்து வந்து
இரத்தம் கொடுக்க வைத்து நண்பன் உயிரைக்
காப்பாற்றும் காட்சி மதுரை மக்களின் மனசாட்சி.
மதுரைக் காரர்கள் பாசக் காரர்கள் என்பதற்கு
எடுத்துக்காட்டு.
மணல் கொள்ளையை தட்டிக் கேட்ட அதிகாரியின்
மனைவியை காரை ஏற்றி கொன்று
விட்டு மகளையும் கொன்று விடுவோம் என
மிரட்டியதால் நீதிமன்றத்தில் விட்டுவிட்டு
பின் வில்லனை அதிகாரி காரை ஏற்றி கொன்று
விடுவது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி .
பல இடங்களில் இயக்குனர் முத்திரை உள்ளது
வில்லன் சாகும் போது இமை மூடுவது போலவே
கேமிரா மூடுவது சிறப்பு .
மிக மென்மையான மனிதர் வி .என் .சிதம்பரம்
அவர்களைக் கொடூர வில்லனாக நடிக்க
வைத்ததில் இயக்குனர் பனி உணர முடிகின்றது .
கடைசியில் படத்தின் முடிவில் படம் பார்த்த
அனைவருக்கும் மகிழ்ச்சி .நட்பிற்கும் கற்பு உண்டு
என்று மெய்ப்பித்த படம் .வெற்றி இயக்குனர்கள்
வரிசையில் முதல் படத்திலேயே இடம் பிடித்து
விட்டார் இயக்குனர் கெளரவ் .வாழ்த்துக்கள் .
உலகப் புகழ் சாக்கிசான் படத்தில் வருவது போல
படம் எடுத்த விதத்தை காட்டியது மிக சிறப்பு .
இயக்குனரின் உழைப்பை உணர முடிந்தது .
பாடல் ,ஆடல், ஒளிப்பதிவு ,ஒலிப்பதிவு
அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள்
சிறப்பாக உழைத்து வெற்றியை தேடித் தந்து உள்ளனர் .
பாடலில் மதுரையின் பெருமை பறை சாற்றி உள்ளனர் .




http://www.eraeravi.com/home/detail.php?id=495&cat=ka








கருத்துகள்