கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYgmwwhCDCikBD5bY8qJXoxgKhFIobkibsheK_lzWeDTYS7q7byPkuqkX_98_f06Ts5mBG6pBNmYLfBrgv2NjruJ8wjwjRNP1rWxZlVVEatxhoJST9ctWegVb2OOV-Hjjj5zMNNqsoYhg/s400/jellykaddu.jpgகணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ? கவிஞர் இரா .இரவி

கணினி யுகத்திலும் ஜல்லிக்கட்டு தேவையா ?
காளைகளை இம்சிப்பது இன்று அவசியமா ?
எ .கே 47 துப்பாக்கி உள்ள காலத்தில்
எதற்கு ?இந்த ஜல்லிக்கட்டு சிந்திப்பாயா ?
காளையை அடக்கினால் கன்னியைத் தந்தனர் அன்று
காளையை அடக்கினால் துண்டு தருகின்றனர் இன்று
கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும்
கொலையான உயிரைத் திரும்பப் பெற முடியுமா ?
வருடா வருடம் உயிர்ப் பலி பெருகுகின்றது
வஞ்சியர் பலர் விதைவை ஆவதும் பெருகுகின்றது
வீரத்தைக் காட்ட எத்தனையோ வழி இருக்க
விவேகமற்ற இந்த
ஜல்லிக்கட்டு எதற்கு ?
ஜல்லிக்கட்டு நடக்கட்டும் என்னும் தலைவர்கள்
ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு காளையைப் பிடிப்பார்களா ?
வைப்பு தொகைகள் இழப்பீட்டு
தொகைகள்
மாண்டிட்ட வாலிபனின் வாழ்க்கையைத் தருமா ?
அயிந்தறிவு கொண்ட காளையை
ஆறறிவு மனிதன் அடக்குவது வீரமா ?
காயங்களும் உயிர்ப் பலியும் தொடர்வதில்
களிப்புறும் மனிதனே பகுத்தறிவைப் பயன்படுத்து
ஜல்லிக்கட்டில் காளையைப் பிடித்தவர் மட்டுமல்ல
வேடிக்கை பார்த்தவரும் பாலமேட்டில்
மடிந்தார்
மது அருந்தி மாடு பிடிக்க வருகின்றனர்
மதுவை மாட்டிற்கும் ஊற்றி விடுகின்றனர்
சாதிக் கலவரத்திற்கு வழி வகுக்கின்றனர்
சதிகள் செய்து அரசியல் சாயம் பூசுகின்றனர்
வீர விளையாட்டு என்ற பெயரில்
உயிரோடு விளையாடும் விளையாட்டு வேண்டுமா?

கணிப்பொறி காலத்திலும் காளையோடு மோதுவது ஏன்?
குடல் சரிந்தவர்கள் பார்க்கப் பரிதாபம்
கட்டாயம் சிந்தித்து செயலை மாற்ற வேண்டும்
வீரத்தைப் பறைசாற்ற வழிகள் பல உண்டு
வீணான உயிர்ப்பலி கேட்க்கும் ஜல்லிக்கட்டை விட்டுவிடு
பெரிய காளை வந்தால் பதுங்குவதும் உண்டு
சிறிய
காளை வந்தால் பலரும் பாயிவதும் உண்டு
மாட்டிற்கும் இம்சை மனிதனுக்கும்
இம்சை
மாத்தி யோசி தேவையா இந்த
இம்சை
வாடிக்கையாக நடக்குது
இந்தவேடிக்கை
வழக்காடி நீதிமன்றம் சென்று நடத்தும் கேளிக்கை
மனிதனும் விலங்கும் வதை படுவதை
முண்டியடித்து பார்த்து ரசிக்கும் கூத்து
தமிழர்களின் பெருமை அல்ல ஜல்லிக்கட்டு
தமிழர்களின் சிறுமை அன்றோ
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கும்
ஜல்லிக்கட்டு
தமிழர்களின் உயிரைக் குடிக்கும் ஜல்லிக்கட்டு
தமிழர்களின் அங்கத்தை சிதைக்கும்
ஜல்லிக்கட்டு
தமிழச்சிகளை விதைவையாக்கும் கொடிய
ஜல்லிக்கட்டு
வாழ வேண்டியவனின்
வாழ்க்கையை முடிக்கும் ஜல்லிக்கட்டு
வஞ்சியர் பலரை வேதனையில் வீழ்த்தும்
ஜல்லிக்கட்டு
வன்முறைக்கு வித்திட்டு வம்பு வளர்க்கும்
ஜல்லிக்கட்டு
நன்மறைக்கு எதிரான முறை இந்த
ஜல்லிக்கட்டு
பெற்றோர்களிடம் இருந்து மகனைப் பறிக்கும்
ஜல்லிக்கட்டு
பெற்றத் தாயை பாசத்தால் துடிக்க விடும்
ஜல்லிக்கட்டு
வாலிபர்களின் உயிரைக்
குடிக்கும் ஜல்லிக்கட்டு
வாலிப்பதைச் சிதைத்து அழிக்கும்
ஜல்லிக்கட்டு
காட்டுமிராண்டி காலத்தில் நடந்த
ஜல்லிக்கட்டு
கணிப்பொறி யுகத்தில் வேண்டாம் மூட்டை கட்டு

கருத்துகள்