மதுரையில் நடந்த மாவீரன் நேதாஜி பிறந்த நாள் கவியரங்கில் பாடிய கவிதை

http://img.dinamalar.com/data/images_studentcalender/Studentcalender_2633303404.jpg
மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்
கவிஞர் இரா .இரவி

வெள்ளையர்களை ஓட ஓட
விரட்டியதில் பெரும் பங்கு வகித்தவன் நீ
அடிக்கு அடி என அடி மேல்
அடித்த அசகாய சூரன் நீ
உனது பெயரை உச்சரித்தாலே
உச்சரித்தவர்களுக்கு வீரம் பிறக்கும்
உலக மனிதர்கள் யாவரும் சமம்
ஆண்டான் அடிமை இல்லை அறிவித்தவன் நீ
ஆணவக்காரகளின் ஆணவத்தை
அடித்து நொறுக்கிய வீரன் நீ
துப்பாக்கி யார் சுட்டாலும்
சுடும் என்று உணர்த்தியவன் நீ
ஆயுதம் ஏந்திய அறிவிலிகளுக்கு
ஆயுதத்தால் தக்க பதில் தந்தவன் நீ
கொட்டக் கொட்டக் குனிந்தது போதும்
கொட்டிய கரங்களை முறித்தவன் நீ

நீ இறந்து விட்டதாக யார் ?சொன்னது
மாவீரர்களின் இதயத்தில் என்றும் வாழ்கிறாய்
நீ
தைய்வான் நாட்டில் விமான விபத்தில் நீ
இறந்து விட்டதாகக் கதை கட்டினார்கள்
தைய்வான் நாடோ விமான விபத்து
நடக்கவே இல்லை என்று அறிவித்தது
இந்தியாவின் விடுதலைக்காக முதன்முதலில்
இந்திய ராணுவம் அமைத்தவன் நீ
பெண்ணுரிமை பற்றி பேசுகின்றோம் இன்று
பெண்களைப் படையில் சேர்த்தாய் அன்று
உலகில் எந்த மூலையில் ஆதிக்கம்நடந்தாலும்
உலகப் போராளிகளின் தலைவன் நீ
பேராயக் கட்சியில் இருந்து நீ நீங்கியபோதே
பேராசைக் காரர்களின் கூடாரம் ஆனது


விடுதலை வந்ததும் பேராயக் கட்சியைக் களைத்திட
விரும்பினார் காந்தியடிகள் அன்று
பேராயக் கட்சி பேராதாயக்
கட்சியானது இன்று
போர்பர்ஸ் தொடங்கி காமன்
வெல்த்து வரை
எங்கும் எதிலும் ஊழல் தாண்டவம் ஆடுகின்றது
வெள்ளையனே வெளியேறு என்றாய் அன்று
வெள்ளையனுக்கு வெண் சாமரம் வீசுகின்றனர் இன்று
தமிழரின் வீரம் அறிந்து படையில் சேர்த்தாய் அன்று
தமிழர்களைக் கொன்ற கொடியவனுக்கு
ரத்தினக் கம்பள வரவேற்பு இன்று
ஈழத்தில் தமிழர்களை
கொன்ற கொடியவனிடம்
இந்தியா ஆயுதமும், கோடிகளும் கொடுத்து மகிழ்கின்றது
நெஞ்சு பொறுக்கவில்லை பேராயக் கட்சியின் துரோகம்
நெஞ்சமுடையோர் வெறுத்தனர் பேராயக் கட்சியை
ஈழத்திலே தமிழர் விடுதலை கேட்டது குற்றமா?
மாவீரன் நேதாஜியே நீயே பதில் சொல்

கருத்துகள்