--
புதிய ஹைக்கூ இரா .இரவி
வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது மரம்
பூ உதிர்த்து
மழை நின்ற பின்னும்
மழை
மரத்திலிருந்து
இயற்கையில் செயற்கை
சிகைத் திருத்தமென
செடித் திருத்தம்
பொறாமை கொள்ளவில்லை
மரத்தைப் பார்த்து
புற்கள்
வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
தாஜ்மஹால்
பார்ப்பதில்லை
காதல் காட்சி
அவளையே ஞாபகப்படுத்துவதால்
நீளமான கூந்தல்
எங்கு பார்த்தாலும்
அவள் நினைவு
பெரிய சோகத்தையும்
நொடியில் அழிக்கும்
அவள் புன்னகை
மறக்க நினைத்தாலும்
முடிவதே இல்லை
அவள் முகம்
நல்ல கவிதைகள்
நூலாகுமுன் இரையானது
கரையானுக்கு
புவி ஈர்ப்பு விசை நியூட்டன்
விழி ஈர்ப்பு விசை
காதலர்கள்
மதங்களை விட
மிகவும் உயர்வானது
மனிதம்
பிரிவால் துடி துடித்தது
அறுபட்ட
பல்லியின் வால்
சிந்தைகளை
சிதைத்து
கேளிக்கைகள்
கருத்துகள்
கருத்துரையிடுக