கல்கத்தா வீதிகளில் விடுதிக்காக
கைஏந்தி சென்றார் அன்னை
உமிழ்ந்தான் ஒரு வியாபாரி
உமிழ்ந்தது எனக்குப் போதும்
விடுதியில் உள்ள தொழு நோயாளிகளுக்கு
விரும்பியதைக் கொடு என்றார்
காலில் விழுந்து வணங்கினான்
கடையில் இருந்து உமிழ்ந்தவன்
“இன்னா செய்தாரை”திருக்குறள் வழி
இனிதே வாழ்ந்து காட்டிய அன்னை
நோபல் பரிசுக்கே நோபல்பரிசு தந்தவர்
நேயம் மிக்க தன்னலமற்ற தாய்
இறந்த பின்னும் வாழ்பவர்கள் சிலர்
சிலரிலும் சிகரமானவர் தெரசா
பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தவர்
பெண்ணின் மேன்மையை உணர்த்தியவர்
பிறருக்காக வாழ்ந்திட்ட மாதா
பண்பில் சிறந்திட்ட பிதா
அயல்நாட்டில் பிறந்திட்ட போதும்
அனைவரின் உள்ளத்திலும் வாழ்பவர்
மனித நேயம் கற்பித்த மனிதம்
மனிதருள் மாணிக்கமாக ஒளிர்ந்த புனிதம்
அன்பின் சின்னம் அன்னை தெரசா
பண்பின் சிகரம் அன்னை தெரசா
கருத்துகள்
கருத்துரையிடுக