https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12bbdfe7ddfcd19d&attid=0.1&disp=inline&realattid=f_gfeyfs4h0&zw
Feathered Festoons
தமிழ் ஹைக்கூ கவிஞர் கவிமுகில்
ஆங்கில மொழி பெயப்பு ஹைக்கூ முனைவர் ராமகுருநாதன்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி
தேமதுரத்தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்ய வேண்டும் என்ற மகாகவி பாரதியின் ஆசையை ப+ர்த்தி செய்து வந்துள்ள இனிய நூல். புகழ் பெற்ற ஹைக்கூ கவிதைகளை எழுதுவதில் வல்லவர் கவிஞர் கவிமுகில். இவர் ஒரு சகலகலா வல்லவர் மரபும் தெரியும் பதுக்கவிதையும் தெரியும் ஹைக்கூ வரும் கவிதையும் எழுதவரும் திரைப்படப்பாடலும் எழுதுவார் மகிழுந்து நிறுவனத்தையும் சிங்காரச் சென்னையில் திறம்பட நடத்துபவர். பன்முக ஆற்றலாளர் இவர். தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அந்நியர்களும் அறிந்து கொள்ளும் அற்புதமாக வடிவமைத்து இருக்கிறார்கள்.

கவிஞர் கவிமுகில் எழுதிய மிகச்சிறந்த ஹைக்கூ கவிதைகள தேர்ந்தெடுத்து அவற்றை பேராசிரியர் இராம.குருநாதன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இருக்கிறார். பேராசிரியருக்கு ஹைக்கூ பற்றி நல்ல புரிதல் இருக்கின்ற காரணத்தால் ஹைக்கூ ஆய்வாளர். காகித்ய அகதெமி உறுப்பினர் என்ற பல்வேறு தகுதிகள் இருப்பதனால் ஹைக்கூவின் மூலத்தில் உள்ள கருத்தை உணர்வை அப்படியே பதிவு செய்துள்ளார்.

மொழி பெயர்ப்பும் ஒரு கலை அது எல்லோருக்கும் வாயப்பதில்லை பேராசிரியர் மிகவும் நுட்பமாகவும் அதே நேரத்தில் எளிமையாக அனைவருக்கும் புரியும் வண்ணம் பழக்கத்தில் உள்ள எளிய ஆங்கிலச் சொற்களையும் பயன்படுத்தி மிகச் சிறப்பாக மொழி பெயர்த்து இருக்கிறார்கள். ஒரு சிலர் மொழி பெயர்ப்பு என்ற பெயரில் மூலத்தை சிதைத்து விடுவார்கள். ஆனால் இந்த நூலில் ஒரு இடத்தில் கூட மூலத்தை சிதைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஆங்கிலத்தில் படிக்கும் போது மற்றொரு பரிமாணம் தோன்றுகின்றது. இதுதான் நூலின் அனுபவங்களை உணர்வுகளை நுட்பமாக பதிவு செய் ஹைக்கூ

அந்த வகையில் நூலில் இடம்பெற்றுள்ள ஹைக்கூவில் சில
இருப்பவரே வரவில்லை
இறந்தவர் வந்து போனார்
வாக்குச்சாவடி

Men alive didn�t come
Dead Visited
Election booth

மண்ணுக்குள் விடுதலை ஏக்கம்
மடியவில்லை புதைந்தும்
தோண்டவேண்டியது ஈழம்

Creaving for liberation under earth
Though died not
Eazham should be digged out

விளையாடிய குளத்துமீன்
விடியவிடிய வேடிக்கைபார்த்தது
நிலா

Fish playing in the pond
Staring at them till dawn
The moon

முடிந்தது அறுவைசிகிச்சை
அழுதார் மருத்துவர்
காணவில்லை கத்தி

Operation over
Doctor cried
knife missing

ஈழத்தில் நெருப்பு
ஏரிதல் முடியவில்லை
தற்கொலைக் குச்சிகள்
Eelam burning
Continues
Suicidal gelatins

உயரம் குறைவுதான் செங்கல்
உள்ளே மறைந்திருந்தது
கோபுரம்
Not so high
Bricks hidden inside
The temple tower


இந்த ஹைக்கூவில் கோபுரம் என்று உள்ளது.ஆங்கிலத்தில் மொழி பெயாத்த பேராசிரியர் இராம.குருநாதன் அவர்கள் (வாந வுநஅpடந வுழறநச) கோயில் கோபுரம் என்று எழுதி இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் படிக்கும் போது இதுவும் நன்றாகத்தான் உள்ளது. கூடுதல் பொருள் தருவதாக உள்ளது.தேர்ந்தெடுத்த நல்ல ஹைக்கூ கவிதைகளை உலகப் பொதுமொழியான ஆங்கிலத்தில் மிக எளிமையான சொற்களைக் கொண்டு மொழிபெயர்த்து, கவிஞர் கவிமுகில் அவர்களை ஆங்கில உலகிற்கும் அந்நிய நாடுகளுக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்கள். மிகக்கடினமான ஆங்கிலச் சொற்கள் எதுவும் நூலில் இடம் பெறவில்லை என்பது மகிழ்வைத்த தருகின்றது

ஹைக்கூ கவிதைகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்கு மிகவும் பயன்தரும் நூல் இது. இந்நூலை தமிழர்களும் படிக்கலாம். ஆங்கிலேயர்களும் படிக்கலாம். காலத்தின் கண்ணாடி இலக்கியம் என்பார்கள். அதுபோல காலத்தைப் பதிவு செய்யும் நிகழ்வுகளை நடைமுறைகளை கவிஞரின் ஆதங்கத்தை, கோபத்தை, உணர்வை, எழுச்சியை, மிகச்சிறப்பாக தனது ஹைக்கூ கவிதைகளில் பதிவு செய்து வெற்றிக் கொடி நாட்டிய சகலகலா வல்லவர் கவிஞர் கவிமுகில் அவர்களின் புகழ் மகுடத்தில் பதித்த கோகினூர் வைரமாக இந்த நூல் உள்ளது.ஹைக்கூ கவிதைகளை குறை சொன்னவர்கள் வெட்கப்படும் வண்ணம் மிகச் சிறப்பாக வந்துள்ளது.

தெளிவான அச்சுத் தரமான பதிப்பு வித்தியாசமான புகைப்படங்கள், என உலகத்தரமான நூலாக வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டின் தலை நகரம் சென்னையில் வாழும் கவிஞர் கவிமுகிலின் ஹைக்கூ கவிதைகள் இன்று உலகம் அறியும் படைப்பாக விரிந்து விட்டது. பாராட்டுக்கள்.

கருத்துகள்