விலங்கு - இரா.இரவி

விலங்கு - இரா.இரவி
விலங்கு என்று விரட்டாதே
வீண்பழி அதன்மேல் சுமத்தாதே

தேனைச் சேர்ப்பது தேனியாகும்
தேனைச் சிதைப்பது நீயாகும்!

இறைச்சி உண்பதில்லை ஆடு
இறைச்சியே உனக்கு ஆடு!

நீயும் மானும் ஓடிப்பார்
நிச்சியம் தோற்பாய் நினைத்துப்பார்

கொடியது பாம்பு என்றாலும்
கடிக்காது நீ அதைச் சீண்டாமல்

பாலைவனக் கப்பல் ஒட்டகமே
பாதை கடப்பது அதன் இனிமே!

நீரை விடுத்துப் பாலை அருந்தும்
நிறைந்த மதியுடைய அன்னம்

நினைத்ததை உன்னால் மறப்பதாலே
நீ அல்ல நிறைமதி அன்னம்

எறும்பின் வேகத்தை உற்றுப்பராது
எதிர்காலம் சேமிக்கும் குணத்தைப்பார்

சினைமாடு என்று தெரிந்துவிட்டால்
காளைமாடு சற்றே ஒதுங்கிவிடும்

கருத்துகள்