தானாய் கழிந்தது பொழுது (நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=12bbdfe7ddfcd19d&attid=0.8&disp=inline&realattid=f_gfeyfs577&zw
தானாய் கழிந்தது பொழுது

(நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)


நூல் ஆசிரியர் - இரா.ஆனந்தி


சங்க காலத்தில் நிறையப் பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள்.அவ்வையார் என்ற பெயரில் பலர் இருந்ததாக சொல்கிறனர்.பெண் கவிஞர்கள் இன்று குறைவாகவே இருக்கின்றனர்.ஆணாதிக்க உலகில் பெண் கவிஞர்கள் வெளிவருவதற்கு நிறைய தடைகள் உள்ளது என்பதும் உண்மை. அப்படிப்பட்ட தடைகளை எல்லாம் தகர்த்து பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இரா.ஆனந்தி, இந்த நூலை மகாகவி பாரதிக்கு காணிக்கையாக்கியிருப்பது மிகச்சிறப்பு. மிகப்பொருத்தமாக திரு.வெ.சுப்பிரமணிய பாரதி என்ற பெயர் உடையவரிடமே அணிந்துரை வாங்கி இருப்பது இன்னும் பொருத்தமாக உள்ளது.

இந்நூலில் ஹைக்கூ புதுக்கவிதை, மரபுக்கவிதை என பல்சுவை விருந்தாக முத்தாய்ப்பாக தனி முத்திரை பதித்து உள்ளார். முதல் ஹைக்கூ கவிதையை பாருங்கள். இதை படித்தவுடனேயே நூல் முழுவதையும் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் பிறக்கின்றது. உடன் ஒரே மூச்சில் கவிதைகளை ஆர்வமாக படித்து விடுகின்றோம்.

கவிதை எழுதினீர்களா?
உம். எழுதினேன்
உன் பெயரை!

இவருடைய ஹைக்கூ கவிதைகள் நம் சிந்தனையில் சிறு மின்னலை ஏற்படுத்துவது உண்மை என்பதை நீங்கள் உணர இதோ அவரது ஹைக்கூ கவிதைகள்.

வண்ணத்துப்பூச்சி உன்
வண்ணம் வேண்டாம்
சிறகு மட்டுமாவது

சின்னத்தாய் செல்லாமாய்
ஸ்பரிசித்தது
தென்றல் - மலரை

சிம்னி ஒளி முன்
சிரிக்கும் கபற்றே
சிறிது தள்ளிப்போ

அணிலே அணிலே
பழம் வேண்டாம்
பதறாமல் உண்

எரிதலைக் குமுறல்
சாம்பல் பூக்கும்
மனம் ஆடும் மௌனம்

மெல்லத் தொட்டு
இதழில் முத்தமிட
நாணியது சரோஜா

ஜப்பானிய ஹைக்கூ கவிதைனளின் இலக்கணப்படி இயற்கையை நம் முன் காட்சிப்படுத்தி ஹைக்கூ எழுதி வெற்றி பெற்றுள்ளார் நூல் ஆசிரியர். நூல் ஆசிரியர் சகலகலா வல்லவர் என்பதை பறைசாற்றுவதாக உள்ளது. புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத கவிதை எழுதும் கூட்டம் ஒன்று உள்ளது. ஆனால் எல்லோருக்கும் எனிதில் புரியும் வண்ணம் மிகச் சிறப்பாக புதுக்கவிதை படைத்துள்ளார். நூல் முழுவதும் மிகச் சிறப்பாக புதுக்கவிதைகள் உள்ளது. சில மற்றும் உங்கள் பார்வைக்கு இதோ!

உன்னைப் பார்க்கவே கூடாது
ஏன்று நினைத்துக் கொள்வேன்
உன் விழிகளைச் சந்திக்கும் வரை
உன்னிடம் பேசவே கூடாது
என்று நினைத்துக் கொள்வேன்
உன் வார்த்தைகளை கேட்கும் வரை
உனக்கு எழுதவே கூடாது
என்று நினைத்துக் கொள்வேன்
உன் வாக்கியங்களை உச்சரிக்கும் வரை
எனக்கு என்னாயிற்று ? என்று என்னிடமே
கேட்டுக் கொள்வேன் அது மட்டும் எப்போதும்.

காதலர்களுக்கான ஊடல், கூடல் நிகழ்வுகள் கவிதையாக வடித்து இருப்பதனால் படிக்கும் வாசர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்விக்கின்றது கவிதைகள். குழந்தையின் விமான ஆசையை கவிதையாக்கி இருக்கிறார் நுட்பமாக. ஆணாதிக்க சிந்தனைக்க முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெண்ணிற்கு சுயம் உண்டு எனப் சித்தரிக்கும் வரிகள்.

நான் எப்படி என நீ தீர்மானிக்காதே
இடம் மாறி,வலம் மாறி எங்கும் செல்வேன்
வந்து விடு என நீ பணிக்க வருவேன்
என நினைக்காதே

இந்த நூலில் புதுமை என்னவென்றால், புதுக்கவிதை என்றால் சிலர் தலைப்பு தந்து விடுவார்கள். ஆனால் இந்நூலில் புதுக்கவிதைகளுக்கு தலைப்புத் தரவில்லை. தலைப்பு இல்லாததால் கவிதை படிக்க புதுமையாக உள்ளது. நல்ல முயந்சி. பாராட்டுக்கள். சின்னச்கின்ன வரிகளில் சிந்;தையை செதுக்கி விடுகிறார். நல்ல உவமைகள், உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணம் இதோ!

வான் நிலா
என்னுடனே வருகிறது
உன் நினைவுகளைப் போல

நீ, ஒரு புரியாத புதிர், புரிந்தவர்கள் சொன்னார்கள்
சொல்லி விட்டுப் போகட்டும்
புதிர் எனக்குப் பிடிக்கும் புரியாமலேயே

"புதிர் கவிதை" எனக்கு மிகவும் பிடித்தது, புரியாமல் அல்ல புரிந்ததால்.உங்களுக்கும் பிடிக்கும்.

இடறி விழ கற்கள் வேண்டாம்
உன் கண்கள் அற்த வேலையை செய்யும்

இப்படி உள்ளத்து உணர்வுகளை, காதலர்களளின் இயல்புகளை மினவும் நுட்பதாக கவிதையாக்கி வெற்றி பெற்றுள்ளார்.

கடல் கடந்து
நாடு கடந்து
எல்லை கடந்து
என்னைக் கடக்கவில்லை நீ

இப்படி நூல் முழுவதும் ரசித்துப் படிக்க நினைத்துச் சுவைக்க கவிதைகள் ஏராளம் உள்ளது. தன்னை ஒரு கவிஞர் என நூலில் பநைசாற்றி விட்ட இரா.ஆனந்தி அவர்களிடம் சிறிய வேண்டுகோள். முதலில் கவிஞராக, காதல் உணர்வு உதவிடும் என்பது உண்மை. கவிஞரான பிறகு சமுதாய அவலங்களை, அவலங்கள் அழித்தி தீர்வுகளை பாடி மற்றொரு நூல் வெளியிடுங்கள். இந்த நூல் பாராட்டுக்குரிய நூல்..

கருத்துகள்