மாற்றம் வேண்டும் - கவிஞர்.இரா.ரவி

மாற்றம் வேண்டும் - கவிஞர்.இரா.ரவி
ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும்
இன்னல்கள் யாவும் தீர்ந்திட வேண்டும்

பன்னாட்டு நிறுவனங்கள் விரட்டப்பட வேண்டும்
பாட்டாளியின் கரங்கள் உயர்த்தப்பட வேண்டும்

அரசியலில் ஊழல் அகற்றப்பட வேண்டும்
அரசியலில் நேர்மை விதைக்கப்பட வேண்டும்

உழவனின் உழைப்பு போற்றப்பட வேண்டும்
உழவுத் தொழில் மதிக்கப்பட வேண்டும்

ஏற்றத் தாழ்வுகள் தகர்க்கப்பட வேண்டும்
ஏங்கும் சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும்

பண்பாட்டுச் சீரழிவு தடுக்கப்பட வேண்டும்
பண்பில் சிறந்தோராக மாற்றப்பட வேண்டும்

சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்திட வேண்டும்
சந்தோச வாழ்க்கை பரவலாக்கப்பட வேண்டும்

சாதிமத சண்டைகள் ஒழிக்கப்பட வேண்டும்
சகோதர உணர்வுகள் மலர்ந்திட வேண்டும்

எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும்
இல்லாதோர் இல்லை என்றாக்கிட வேண்டும்

மூடநம்பிக்கைகள் முற்றாக தடை செய்திட வேண்டும்
மூளையை பகுத்தறிவிற்கு பயன்படுத்திட வேண்டும்

ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் வேண்டும்
இனவெறி பிடித்த சிங்களர்கள் திருந்திட வேண்டும்

பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக தடுக்கப்பட வேண்டும்
ஏழைகள் மேலும் ஏழைகளாவது நிறுத்தப்பட வேண்டும்.

கருத்துகள்