நூலின் பெயர் : மனதில் ஹைக்கூ
நூலின் ஆசிரியர் : இரா.இரவி
நூல் விமர்சனம் :முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில் :
உலகம் மூன்று ; கணிக்கும் காலம் மூன்று; ;சுவையூட்டும் கனி மூன்று ;உலகப்பொதுமறையின் பால் மூன்று ;அரும்பெருந் தமிழ் மூன்று ; ஆற்றல்சால் வேந்தன் மூன்று என புகழின் உச்சத்தை எட்டிய அனைத்துமே ' மூன்று' எனும் உயரிய எண்ணாக வடிவெடுக்க,அதில் துளிப்பா மட்டும் விதிவிலக்கா என்ன ? மூன்றே வரிகளில் முத்தான கருத்துக்களை வாசகர் மனதிற்குள் புகுத்தும் சக்தி கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு உண்டு என்பதனை நிரூபணம்செய்ய வந்த நூலே 'மனதில் ஹைக்கூ'
ஆதியோடு அந்தமும் :
கடிகாரம் முதல் கணினி வரை ,பூசணிக்காயிலிருந்து பொக்ரான் வரை ,சம்மட்டி தொடங்கி சந்திராயன் வரை,காந்திதாசன் முதல் கண்ணதாசன் வரை, வாடும் ரோஜாமுதல் வாடாமல்லி வரை,அரேபியா முதல் ஆகாயம் வரை அலசி ஆராய்கிறது 64 பக்கங்களையுடைய மனதில் ஹைக்கூ எனும் அற்புத நூல்.
இதயப்பகுதி :
ஹைக்கூ திலகம் இரா.இரவியின் இந்நூலில் சமூக அத்துமீறல்கள் அப்பட்டமாக வெளிச்சமிட்டு காட்டப்பட்டிருக்கின்றது.மூடநம்பிக்கைகளின் ஆணிவேர் கிள்ளி எறியப்படுகின்றது.தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் வரைமுறையற்ற ஆதிக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இயற்கை இடையிடையே வந்து நலம்விசாரித்து விட்டு போகின்றது.பாசமும்நேசமும் பாங்காய் பண் பாடுகிறது. தன்னம்பிக்கை ஆங்காங்கே
பளிச்சிடுகின்றது.ஒரு சமூக சீர்திருத்தவாதியின் ஒட்டுமொத்த பணியை செய்வதற்கு ' ஹைக்கூ' எனும் அஸ்திரத்தை கவிஞர் இந்நூலில் பயன்படுத்தியுள்ளார
இரத்த ஓட்டம் :
இந்த கவிதை தொகுப்பில் அஞ்சல் பெட்டி அழுகின்றது.தொலைக்காட்சிப்பெட்டி தொற்று நோய் பரப்புகின்றது.கைபேசி கதற வைக்கின்றது.அல்லி கூம்புகின்றது.பட்டாசு பற்றி வெடிக்கின்றது.பாம்பு இரை தேடுகின்றது.குப்பை கூட தத்துவம் பேசிச்செல்கின்றது.மொத்தத்தில் கற்கால கோடாரி முதல் தற்கால கணினி வரை கருவாக உருமாற்றியிருக்கிறார் கவிஞர்.
நவரத்தின குவியல் :
பழமொழியை காலத்திற்கு ஏற்றாற் போல் புதுமொழியாக மாற்றுவது என்பது கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு கை வந்த கலை.
குஞ்சுகள் மிதித்து
கோழிகளுக்கு காயம்
முதியோர் இல்லம்.
நகைச்சுவை கவிதை :
மேலிருந்து குதித்தான்
மரணம் இல்லை
நீச்சல் குளம்.
'நச்'-என்று ஒரு கவிதை:
பாஸ் மார்க் வாங்கியும்
கிளாஸ் பாட்டிலுடன் வேலை
டாஸ்மாக் .
இளைஞர்களுக்கு ஓர் இலவசக்கவிதை :
மூளைப்புற்று நோய்
முற்றிலும் இலவசம்
செல்பேசியுடன் !
சொல் விளையாடல் கவிதை :
காசு கரியானது தீபாவளி
கரி காசானது
நெய்வேலி.
சமூகத்தை படம்பிடித்து காட்டும் கவிதை :
உலகெல்லாம் உறவு
பக்கத்து வீடு பகை
மனிதன்.
மனதார ...
ஒன்பதாவது மைல்கல்லை எட்டி, ஹைக்கூ இலக்கிய உலகிற்கு 'மனதில் ஹைக்கூ' எனும் ஒப்பற்ற நூலை வழங்கியிருக்கும் கவி சூரியன் இரா.இரவியின் பெயரும் புகழும் அலைகடல் தாண்டி அகிலம் முழுவதும் ஒலிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக