அன்னை தெரசா-கவிஞர் இரா.இரவி
அன்பின் முகவரியே! தொண்டின் இமயமே!
மனிதருள் மாணிக்கமே! மாசில்லாத்தங்கமே!
மண்ணில் தெரசாவே! மகத்தான தாயே!
தியாகத்தின் உருவமே! சேவையின் சிகரமே!
தொழுநோயாளிகளின் புகலிடமே!தன்னலமற்ற தியாகச்சுடரே!
தள்ளாத வயதிலும் தளராத தேனீயே!
ஆதரவற்ற அனாதைகளின் இன்பத்தோணியே!
மனித நேயம் மறைந்திட்டஇயந்திர உலகில்
மனிதநேயம் உணர்த்திட்ட இனிய உள்ளமே!
உன்னை நோபல் பரிசு கௌரவப்படுத்தவில்லை
உன்னால் நோபல் பரிசு கௌரவப்பட்டது
வாழ்க்கையில் சிலர் தியாகம் செய்வதுண்டு
வாழ்க்கையே தியாகம் செய்தது தெரசா மட்டுமே!
இறப்பு என்பது உன் உடலுக்கு
இறப்பு இல்லை உன் புகழுக்கு
அன்னைக்கு இணை அகில உலகிலும் இல்லை.
அன்னைக்கு இணை அன்னை தெரசா மட்டுமே!
-
கருத்துகள்
கருத்துரையிடுக