தந்தை பெரியார் சொன்னபடி திரைப்படம் சமுதாயத்தைப் பிடித்த பெரு நோயாகப் பெருகி வருகிறது

இன்று மாலை ஒரு 7.30 மணியளவில் சன் பிக்சர்ஸ் வெளியிடும் எந்திரன் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகச்சியை காண நேரிட்டது. பார்க்கும் பொழுதுதான் எனக்கு இப்படி ஒரு கேள்வி தோன்றியது. நிகழ்ச்சி ஒளிபரப்பிய சன் நிறுவனம் இதை ஒரு சாதனை என்பது போலவும் மொத்த தமிழ் நாட்டுக்கே ஒரு விழா என்பதாகவும் காட்டினார்கள். கோவிலில் வைத்து பூசை, யானையில் ஊர்வலம், பாலாபிசேகம், பட்டாசுகள், நடனங்கள் என ஆயிரக்கணக்கில் தான் சம்பாதித்த பணத்தை தண்ணியாக செலவழிக்கும் இளைய சமுதாயத்தை காண நேர்ந்தது.இதெல்லாம் எதற்காக ரஜினி எனும் தனி மனிதனும் அவரை வைத்து பணம் பண்ணுபவர்களுக்கும் இலவச விளம்பரம் தரவே தான் உழைத்து சம்பாதித்த பணத்தை மேல் சொன்ன வழிகளில் வீணடிக்கிறது இளைய சமுதாயம். இதனால் அவர்களுக்கு நல்ல வருமானம், நல்ல விளம்பரம் என நிறைய கிடைக்கிறது. இவர்களுக்கு என்ன கிடைக்க போகிறது. நல்ல வருமானம் வராது என்றால் யாரேனும் நடிப்பர்களா.. இல்லை படம் தான் எடுப்பார்களா... இவர்கள் ஏன் இப்படி முட்டாள்களாக இருக்கிறார்கள். என்னைக்காவது ஒரு ஏழைக்கு உணவு தந்ததுண்டா... தவிக்கும் ஒரு குழந்தையின் தாயிக்கு பால் வாங்கி தந்ததுண்டா... வீணாக வெடித்து புகையாகும் பட்டாசுக் காசை ஒரு சிறுவனின் படிப்புக்கு செலவழித்தது உண்டா...இதையெல்லாம் தவிர்க்க என்ன வழி... அவர்களால் உங்களுக்கு என்ன பயன்... அவர்களால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது.

சினிமா என்பது ஒரு வியாபாரம். அதுவும் தமிழ் நாட்டில் நன்றாக பணம் கொழிக்கும் என்பதை ஹாலிவுட் நிறுவனங்கள் கூட அறிந்த உண்மை. அப்படி இருக்கையில் உங்களின் சொந்த பணத்தை செலவழித்து இதை எல்லாம் செய்ய வேண்டிய தேவை என்ன.. நம்மை சுற்றி இருக்கும் எவ்வளவோ தேவை உள்ளவர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு ஏதாவது செய்யலாம் இல்லையா...

ஒரு சில படித்த மக்களையும் காண முடிந்தது இந்த கூட்டத்தில்... இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ... இந்த மாநிலமும் இந்த மக்களும் என்று திருந்தப் போகிறார்கள்... மிகவும் கவலையான ஒரு விசயமாக தோன்றியதால் பகிர்ந்து கொண்டேன்.


பிரார்தனைகளுடன்...
M.I.B
தந்தை பெரியார் சொன்னபடி
திரைப்படம் சமுதாயத்தைப் பிடித்த
பெரு நோயாகப் பெருகி வருகிறது

நடிகரும் ,தயாரிப்பாளரும் கோடிகள்
ஈட்டப் போகும் திரைப் படத்திற்கு,
ரசிகன் பெற்றோர் தந்த பணத்தில்
நடிகரின் கட் அவுட்டிற்கு
பாலபிசேகம், பீர் அபிசேகம் ,
மாலைகள் ,வெடிகள் இட்டு
பணத்தை விரயம் செய்யும்
பகுத்தறிவைப் பயன்
படுத்தாத மடையர்களின்
தலையில் குட்டு வைத்ததற்கு
மிக்க நன்றி .தந்தை பெரியார் சொன்னபடி
திரைப்படம் சமுதாயத்தைப் பிடித்த
பெரு நோயாகப் பெருகி வருகிறது
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்

கருத்துரையிடுக