தமிழா நீ பேசுவது தமிழா?
தமிழா நீ பேசுவது தமிழா?
தமிங்கிலம் நீ பேசுவது அழகா?
உணவுக் கலப்படம் உடலுக்குக் கேடு
மொழிக் கலப்படம் மொழிக்குக் கேடு
என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்
தமிழா நீ பேசுவது தமிழா?
தமிங்கிலம் நீ பேசுவது அழகா?
உணவுக் கலப்படம் உடலுக்குக் கேடு
மொழிக் கலப்படம் மொழிக்குக் கேடு
என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில்
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில்
தமிழைப் பிழையின்றித் தமிழாகவேப் பேசு
தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு
தொலைக்ககாட்சியில் தினமும் தமிழ்க்கொலை நடக்குது
தொல்லைக்காட்சி நிலை காண நெஞ்சம் கொதிக்குது
பத்துச் சொற்களில் இரு சொல் தமிழ்
பெயரோதமிழ் மாலை என விளம்பரங்கள்
தமிழா உன் அடையாளம் தமிழ்
தமிழ் சிதைந்தால் தமிழன் சிதைவான் உணர்
தமிழா உன் முகவரி தமிழ்
தமிழ் அழிந்தால் தமிழன் அழிவான் எழு
நமக்கென்ன என்று நீ இருந்து விட்டால்
நாளைய வரலாறு உன்னைப் பழிக்கும்
உலகின் முதன்மொழி தமிழ்மொழி
உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி
பிறமொழிகலந்து பேசுவதை விட்டுவிடு
பண்டைத் தமிழ்மொழிக் காத்திட நீ விழித்திடு
செம்மொழி நம் மொழி சிறப்பை உணர்ந்திடு
கருத்துகள்
கருத்துரையிடுக