வெற்றி உன் கையில்!கவிஞர் இரா. இரவி

வெற்றி உன் கையில்! கவிஞர் இரா. இரவி


விதி என்று வெந்து சாகாதே!
விதி என்று ஒன்றும் கிடையாதே!
தோல்விக்குப் பயந்து வாய்ப்பை விடாதே!
துவண்டு விட்டால் வெற்றி கிடைக்காதே!
எடிசன் தோல்விக்குத் துவண்டு இருந்தால்
இருட்டாகவே இருந்திருக்கும் இந்த உலகம்
என்னால் முடியும் எதுவும் முடியும்
என்றே முயன்றால் இனிதே முடியும்!
சோம்பலை விடுத்துச் சுறுசுறுப்பை பெற்றிடுக!
அகந்தையை விடுத்து அன்பைப் பெற்றிடுக!
அச்சத்தை விடுத்துத் துணிவைப் பெற்றிடுக!
துன்பத்தை விடுத்து இன்பத்தைப் பெற்றிடுக!
தூக்கத்தை விடுத்து உழைப்பைப் பெருக்கிடுக!
வேகத்தை விடுத்து விவேகத்தைப் பெற்றிடுக!
வேதனையை விடுத்து வெற்றியைப் பெற்றிடுக
வெற்றி உன் கையில் என்பதை உணர்ந்திடுக!
வீணாய் அடுத்தவரைப் பழிப்பதை நிறுத்திடுக!

-

கருத்துகள்