என்னவளே


என்னவளே

சைவம் என்றாயே
பிறகு ஏன்?
விழிகளில்மீன்களை
வைத்து இருக்கிறாய்
இரா .இரவி

என்னவளே

உலகில் கோடி
மீன்கள் இருக்கலாம் .
உந்தன் விழி மீன்களுக்கு
இணையான மீன்கள்
இல்லவே இல்லை .
மற்ற மீன்கள் சுவைத்தால் சுவை .
உன் மீன்கள் பார்த்தாலே சுவை .
மற்ற மீன்கள் வலையில் விழும்
உன் மீன்கள் வலை விரிக்கும்
மற்ற மீன்கள் நீரில் வாழும்
உன் மீன்கள் நீர் கண்டால்
என் மனம் வாடும்
இரா .இரவி

கருத்துகள்