திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்கம் பொருள் : குறள் கூறும் குடிமை - கவிஞர் இரா.ரவி

Valluvar



திருக்குறள் ஆய்வுக் கருத்தரங்கம் பொருள் : குறள் கூறும் குடிமை - கவிஞர்
இரா.ரவி editor www.kavimalar.com உலகப் பொதுமறையான திருக்குறளில் 1330
குறள்கள் இருந்தாலும், குடிமை பற்றிய 10 திருக்குறளைக் கடைபிடித்தால் வாழ்வில்
உயரலாம். மனிதர்களில் சிலர், நான் உயர்ந்த குடியில் பிறந்தவன் என இருமாப்புடன்
இருக்கின்றனர். ஆனால் திருவள்ளுவர் யார் ? உயர்ந்த குடி என்பதற்கு பல்வேறு
விளக்கங்கள் தந்துள்ளார். திருவள்ளுவர் வழியில் வாழ்பவரே உயர்குடி.

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 951

எந்த ஒரு மனிதன், நடுநிலை தவறாமல் நாணயத்தோடு நடக்கிறானோ ? அவன் தான் உயர்ந்த
குடி உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று சொல்லிக் கொண்டு நாணயம் தவறி,
நடுநிலைமையின்றி வாழ்பவன் உயர்ந்த குடியே அன்று. இது தான் திருவள்ளுவர் சொல்ல
வந்த கருத்து. பிறப்பால் தாழ்ந்த குடியில் பிறந்தாலும், நேர்மையாக வாழ்பவன்
உயர்ந்த குடி தான். இது தான் திருவள்ளுவர் தரும் விளக்கம்.

ஒழுக்கமும் வாய்மையும் நானும் இம்மூன்றும்
இருக்குhர் குடிபிறந் தார். - குறள் 952

உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று உதடு சொல்வதை விட சிறந்தது. உன்னுடைய நல
;ஒழுக்கமான செயலால் உலகம் உன்னை உயர்ந்த குடியில் பிறந்தவன் என்று
போற்றும்படியாக வாழ வேண்டும். காஞ்சிபுரத்தில் காமுகன் அர்ச்சகர் தேவநாதன்
உயர்ந்த குடி என்று சொல்லப்படும் அந்தனர் சமுதாயத்தில் பிறந்தவன் தான். ஆனால்
அவனை உலகம் உயர்குடியாக ஏற்பதில்லை. காரணம் உயர்ந்த குடியில் பிறந்தாலும்
ஒழுக்கம் தவறியவன். இழிசெயல் செய்தவன், மனிதனாகக் கூட மதிக்கப்படுவதில்லை.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் இன்றைக்கும்
பொருந்துவதாக உள்ளது.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு - குறள் 953

தம்மை விட வசதியில் குறைந்த ஏழைக்கு உதவிடும் உள்ளம், இனிய சொற்களைப் பேசுதல்,
பிறரை இகழ்ந்து பேசாதிருத்தல் இவற்றைத் தான் உயர்குடிக்கு இலக்கணமாகக்
கூறுகின்றார் வள்ளுவர். இப்படி நடப்பவர்கள் எல்லாம் உயர்குடி, இப்படி
நடக்காதவர்கள் உயர்குடியில் பிறந்தாலும், அவர்கள் உயர்குடியன்று என்று மிகத்
தெளிவாக விளக்குகின்றார் வள்ளுவர்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இவர் - குறள் 954

உயர்ந்த குடியில் பிறந்தவர் கோடிப் பொருளுக்காக தவறான செயல் புரிந்தால் அவர்
உயர்குடியன்று என்பதை தெளிவாக விளக்குகின்றார் வள்ளுவர். தீயவழியில் கோடி
திரட்டுவோர் உயர்குடியன்று.

வழங்குவ துள்வீழ்ந்த கண்ணும் பழங்குடி
பண்யில் தலைப்பிரிதல் இன்று - குறள் 955

சிறிய அளவில் பிறருக்கு தந்தாலும், வழங்குகின்ற உயர்ந்த உள்ளத்தார் உயர்குடி
என்கிறார். அநீதியான வழியில் ஈட்டிய பெரும்பொருளை வாரி வழங்கினாலும், அவர்
உயர்குடியன்று என்பதே இதன் பொருள்.

சலம்பற்றிச் சார்பில் செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்வதும் என்பார் - குறள் 956

வஞ்சனையான தொழில் செய்பவர்கள் யாராக இருந்தாலும், உயர்குடியில் பிறந்து
இருந்தாலும் அவர் உயர்குடியன்று. தாழ்ந்த குடியில் பிறந்தாலும் வஞ்சனை இல்லாத
நேர்மையான தொழில் செய்து உழைக்கும் உண்மை உழைப்பாளிகள் யாவரும் உயர்குடி.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசாம்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து - குறள் 957

உயர்ந்த குடியில் பிறந்தவர்கள் மிக நேர்மையாக வாழ வேண்டும். பிறர் பழிக்கும்
செயலை ஒரு போதும் செய்யக் கூடாது. அவ்வாறு தவறான செயல் செய்தால், நிலவில்
தெரியும் களங்கம் எல்லோர் கண்களுக்கும் தெரிவது போல அனைவருக்கும் தெரியும்.
எனவே உயர்குடியில் பிறந்தவர்கள் மிக நேர்மையாக வாழ வேண்டும், மிக கவனமாக வாழ
வேண்டும், நேர்மை தவறினால் தவறியவர் உயர்குடியன்று என்கிறார் வள்ளுவர்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவளைக்
குளத்தின்கண் அய்யப் படும் - குறள் 958

உயர்ந்த குலத்தில் பிறந்தவன், நல்ல குணத்தில் நாட்டமின்றி கெட்ட வழியில்
நடந்தால் உலகம் அவன் உயர்ந்த குலத்தில் பிறந்தவனா என்பது பற்றி அய்யம்
கொளவார்கள். எனவே நல்வழியிலேயே நடப்பவன் தான் உண்மையான உயர்ந்த குடி.
நல்வழியில் நடப்பவர் எல்லோரும் உயர்ந்த குடி தான். தீயவழியில் நடப்பவர்
எல்லோரும் உயர்ந்த குடியில் பிறந்து இருந்தாலும் அவன் தாழ்ந்தவனே, திருக்குறளை
பல்வேறு கோணத்தில் பொருள் கொள்ளலாம். அது தான் திருக்குறளின் தனிச் சிறப்பு.

நிலத்தில் கிடந்தமை கால்கட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் - குறள் 959

விளைந்து வரும் பயிர் அந்த மண்ணின் தன்மையைக் காட்டிவிடும். அது போல தீயசொல்
பேசுபவர்களை அவர்களது குலம் காட்டிக் கொடுத்து விடும். அதாவது உயர்ந்த
குலத்தில் பிறந்தாலும் தீய சொற்களை பேசினால் அவன் தாழ்ந்த குலம் தான். தாழ்ந்த
குலத்தில் பிறந்து இருந்தாலும் தீய சொல் பேசாமல் நல்ல சொல் மட்டுமே பேசினால்
அவன் உயர்ந்த குலம்.

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டும் பார்க்கும் பணிவு - குறள் 960

ஒருவன் நன்மையை விரும்பினார் அவனிடத்தில் நாணயம் இருக்க வேண்டும். அவன்
எல்லோரிடத்திலும் பணிந்து நடத்தல் வேண்டும். உயர்ந்த குடியில் பிறந்தவன் என்ற
ஆவணத்தில் பிறரை மதிக்காமல், பிறரை பணியாமல் வாழ்பவன் உயர்ந்த குடியன்று.
உதட்டளவில் உயர்ந்த குடி என்று உரைப்பவன் உயர்ந்த குடியன்ற.

முடிவுரை : மனிதரில் யார் ? ஒருவர் மனசாட்சிக்கு பயந்து நேர்மையாகவும்,
நாணயமாகவும், ஒழுக்காமாகவும் இன்சொல் பேசி, பிறரை மதித்து, பிறருக்கு பணிந்து,
ஏழைக்கு உதவ இரக்க குணம் படைத்து அறநெறியில் வாழகிறாரே! அவர் தான் உயர்ந்த குடி
என்கிறார் திருவள்ளுவர். மொத்தத்தில் குடிமை உயர்குலம் என்பதை உயர்திணை என்றும்
பொருள் கொள்ளலாம். மனிதனாகப் பிறந்தவன் எல்லாம் மனிதன்று. நல் மனிதனாக வாழ்பவனே
மனிதன்.

அதிகாரம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், உயர்குடி என்பது பிறப்பால் அன்று,
செயலால், உயர்ந்த செயல் புரிவோர் யாராக இருந்தாலும் உயர்குடி, தீயசெயல்
புரிவோர் யாராக இருந்தாலும், உயர்ந்த குடியில் பிறந்து இருந்தாலும்
உயர்குடியன்று. எனவே மனிதன், தான் பிறப்பால் உயர்ந்த குடி என்ற செருக்கை
அழித்து, செயலால் உயர்ந்த குடி என்று நிரூபிக்க வேண்டும். பிறப்பால் தாழ்ந்த
குடியில் பிறந்தாலும் வருந்தத் தேவை இல்லை. தனது தூய செயலால், நடத்தையால்
நேர்மையாக வாழ்ந்தால் அவரும் உயர்குடி தான் என்று அழுத்தமாகப் பதிவு
செய்கின்றார் திருவள்ளுவர். மனிதர்கள் யாவரும் இக்கருத்தை உள்வாங்கி உலகப்
பொதுமறையாம் திருக்குறள் வழி அறநெறியில் வாழ்வதே வாழ்க்கை.

மனிதன் உயர்திணை என்கிறோம். மனிதன் தான் வாழும் உயர்ந்த வாழ்க்கையால் தான்
உயர்திணை ஆளாகின்றான். மனிதன் உயர்திணை என்பதால் உயர்வாக வாழ வலியுறுத்துவதே
திருக்குறள்.

கருத்துகள்