கொடிது கொடிது வறுமை கொடிது
வயிற்றுப் பசிப் போக்க
கயிற்றில் நடக்கும் கொடுமை
காசு போடாத கல் நெஞ்சங்கள்
நூல் இழை தவறினாலும் மரணம்
நுட்பமாக வேண்டும் கவனம்
இந்தியா ஏவுகணை ஏவி என்ன பயன் ?
ஏழ்மையை ஒழிக்க வழி காணுங்கள்
அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள்
அழுகி வீணாகப்போகும் தானியங்களை
அல்லல் படும் ஏழைகளுக்கு வழங்குங்கள்
வேலைக்கு உத்திரவாதம் வழங்குங்கள்
இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக