மனிதா திருந்திவிடு கவிஞர் இரா.இரவி

மனிதா திருந்திவிடு கவிஞர் இரா.இரவி













உன்னையும், என்னையும்
பிரிப்பது சாதி என்றால்
அந்த சாதிக்கு இன்றே
சமாதி கட்டு

உன்னையும், என்னையும்
பிரிப்பது மதம் என்றால்
அந்த மதத்தை இன்றே
மயானத்திற்கு அனுப்பு

உன்னையும், என்னையும்
பிரிப்பது பேதம் என்றால்
அந்த பித்தலாட்டத்தை இன்றே
புதைத்துவிடு

உன்னையும், என்னையும்
பிரிப்பது இனம் குலம் என்றால்
அந்த ஈனத்தே இன்றே
தூக்கிலிடு

உன்னையும் என்னையும்
உரித்தாலே வெங்காயம்

கருத்துகள்

கருத்துரையிடுக